$11.5 மி. மோசடி; 13 வயது இளையர் உள்பட 457 பேரிடம் விசாரணை

$11.5 மி. மோசடி; 13 வயது இளையர் உள்பட 457 பேரிடம் விசாரணை

2 mins read
bfd93c93-1c83-4111-9dc1-3615d3b58243
-

சிங்­கப்­பூ­ரில் ஏறக்­கு­றைய 1,500 மோச­டிச் சம்­ப­வங்­களில் தொடர்­பு­டை­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 457 பேரி­டம் காவல்­துறை விசா­ரணை நடத்­தி­வ­ரு­கிறது. அவர்­களில் 316 பேர் ஆண்­கள்; 141 பேர் பெண்­கள்.

மோச­டி­யில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­வோ­ரில் ஆக இளை­ய­வ­ரின் வயது 13; ஆக முதி­ய­வ­ருக்கு 73 வயது.

காவல்­துறை மற்­றும் வர்த்­த­கக் குற்ற விவ­கா­ரங்­கள் பிரி­வின் அதி­கா­ரி­கள், இம்­மா­தம் 11ஆம் தேதிக்­கும் 28ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் தீவு முழு­வ­தும் நடத்­திய சோதனை நட­வ­டிக்­கை­யில் சந்­தேக நபர்­கள் அடை­யா­ளம்­ கா­ணப்­பட்டனர்.

இணை­யக் காதல் மோசடி, மின்-வர்த்­தக மோசடி, சீன அதிகாரிகளைப் போல் நடித்து ஏமாற்­றி­யது மற்­றும் முத­லீடு, வேலைவாய்ப்பு, தொழில்­நுட்ப ஆத­ரவு, கடன் ஆகி­யவை தொடர்­பான மோச­டி­கள் போன்­றவை தொடர்­பில் 457 பேரி­ட­மும் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

மோசடி, கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றி­யது, உரி­மம் இன்றி கட்­ட­ணச் சேவை­கள் வழங்­கி­யது போன்­ற­வற்­றில் தொடர்­பு இ­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தின்­பே­ரில் இவர்களிடம் விசா­ர­ணம் நடத்­தப்­ப­டு­வ­தா­கக் காவல்­துறை கூறி­யது.

மோச­டிக் குற்­றத்­துக்கு பத்தாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். பண­மோ­சடி நிரூ­பிக்­கப்­பட்­டால் பத்­தாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ 500,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­தமோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.

உரி­மம் இன்றி சேவை­கள் வழங்­கிய குற்­றத்­துக்கு மூன்று ஆண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ 125,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­தமோ இரண்­டுமோ விதிக்­கப்­படலாம்.

மோச­டிக் குற்­றங்­க­ளைக் கடு­மை­யா­கக் கரு­து­வ­தா­க­வும் அதில் ஈடு­ப­டு­வோர் சட்­டப்­படி தண்­டிக்­கப்­ப­டு­வர் என்­றும் காவல்­துறை குறிப்­பிட்­டது.

பொது­மக்­கள் தங்­கள் வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளையோ கைத்­தொ­லை­பே­சி­யையோ யாரி­ட­மும் பகிர்ந்­து­கொள்ள வேண்­டாம் என்று நினை­வு­றுத்­தப்­ப­டு­கிறது.

வங்­கிக் கணக்கோ கைத்­தொ­லை­பே­சியோ குற்­றச்­செ­யல்­களில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது நிரூப்­பிக்­கப்­பட்­டால், அவர்­கள் அதற்­குப் பொறுப்­பா­கக் கரு­தப்­ப­டு­வார்­கள் என்று காவல்­துறை தெரி­வித்­தது.