புக்கோம் தீவு: $59 மி. எரிபொருள் திருட்டை ஒப்புக்கொண்ட ஆடவர்

புக்கோம் தீவு: $59 மி. எரிபொருள் திருட்டை ஒப்புக்கொண்ட ஆடவர்

1 mins read
97f9e805-366e-4b1b-a115-e311522d5209
-

புக்­கோம் தீவில் அமைந்­துள்ள 'ஷெல் ஈஸ்­டர்ன் பெட்­ரோ­லி­யம்' நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான எண்­ணெய்ச் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தில் இருந்து 59 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான மதிப்­புள்ள எரி­பொ­ருள் திரு­டப்­பட்­ட­தில் தொடர்­பி­ருப்­ப­தாக 34 வயது முக­மது ஃபர்­ஹான் முக­மது ரஷீது ஒப்­புக்­கொண்­டார்.

2014ஆம் ஆண்­டுக்­கும் 2016ஆம் ஆண்­டுக்­கும் இடை­யில் நடந்த பெரிய அள­வி­லான அந்­தத் திருட்­டில் ஈடு­பட்­ட­தன் மூலம் அவ­ருக்கு 735,000 வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகை கிட்­டி­யது.

எரி­பொ­ருள் திருட்டு தொடர்­பில் சுமத்­தப்­பட்ட 13 நம்­பிக்கை துரோ­கக் குற்­றச்­சாட்­டு­களை ஃபர்­ஹான் நேற்று நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

குற்­றச் செய­லின் மூலம் ஈட்­டிய 270,000 வெள்­ளி­யைக் கையாண்­டது தொடர்­பான நான்கு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் போதைப் பொருள் பயன்­ப­டுத்­தி­யது தொடர்­பான ஒரு குற்­றச்­சாட்­டை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார். மே 26ஆம் தேதி அவ­ருக்கு தண்­டனை விதிக்­கும்­போது மேலும் 25 குற்­றச்­சாட்­டு­கள் கருத்தில் கொள்­ளப்­படும் என்று நீதி­மன்­றம் தெரி­வித்­தது.