கெப்பல் பட்டறையில் விபத்து: 2 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்

கெப்பல் பட்டறையில் விபத்து: 2 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்

1 mins read
7fdcaa39-841c-4247-8b9a-564aa9d26072
விபத்து ‌ஏற்பட்டபோது, ஊழியர்கள் சாரக்கட்டிலிருந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்) -

கெப்பல் பட்டறையில் சாரக்கட்டு சரிந்து விழுந்ததில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் மாண்டனர். விபத்து ஏற்பட்டபோது, அவ்விருவரும் கப்பலில் பழுதுபார்ப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

30 மற்றும் 42 வயதான அந்த இரு ஊழியர்களும் பங்களாதே‌ஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள். சம்பவ இடத்திலே அவர்கள் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

ஒரு கப்பலில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கட்டமைப்பு அமைக்கப்பட்டடு அதைச் சுற்றி சாரக்கட்டு போடப்பட்டிருந்தது.

விபத்து ‌ஏற்பட்டபோது, மூன்று பங்களாதே‌ஷ் ஊழியர்கள் அதில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சாரக்கட்டு திடீரென சரிந்தபோது, மாண்ட இருவரும் அதிலிருந்து தூக்கியேறியப்பட்டனர். மூன்றாவது நபர் கட்டமைப்பை பிடித்துக்கொண்டதாக அமைச்சு கூறியது.

கப்பலின் பழுதுபார்ப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து மனிதவள அமைச்சும், காவல் துறையும் விசாரித்து வருகின்றன.