ஏடிஸ் கொசுக்கள் அதிகமுள்ள வட்டாரங்களில் ஊதா நிற பதாகைகள்

ஏடிஸ் கொசுக்கள் அதிகமுள்ள வட்டாரங்களில் ஊதா நிற பதாகைகள்

1 mins read
93cbc899-dc63-473b-8f82-59f80652fabc
படங்கள்: ஸரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

டெங்கி தொற்றுப் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஏடிஸ் கொசுக்கள் அதிகமாகக் காணப்படும் வட்டாரங்களில் புதிய ஊதா நிற பதாகைகள் வைக்கப்படும்.

தற்போது மஞ்சள், சிவப்பு, பச்சை ஆகிய நிற பதாகைகளை தேசிய சுற்றுப்புற வாரியம் பயன்படுத்திவருகிறது.

கொசுக்களை ஒழிப்பது, டெங்கி பற்றி சமூகத்திடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக நிற பதாகைகள் குடியிருப்பு வட்டாரங்களில் வைக்கப்படுகின்றன.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து சுமார் 3,000 பேருக்கு டெங்கி பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக வாரியம் தெரிவித்தது. சென்றாண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,000.

இந்நிலையில் டெங்கி அபாயமுடைய 112 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொவிட்-19 சூழ்நிலையிலும், டெங்கி தொடர்ந்து பொது சுகாதாரத்துக்கு ஒரு மிரட்டலாக இருப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் குறிப்பிட்டார்.