சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் இந்தாண்டிலிருந்து கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக முனையத்தில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு வந்தன. கொவிட்-19 தொற்றால் சரிவடைந்த பயணிகளின் எண்ணிக்கை காரணமாக அது 2020ஆம் மே மாதத்தில் மூடப்பட்டது.
அதே காலக்கட்டத்தில் மூடப்பட்ட முனையம் நான்கும் திறக்கப்படும் எனறு அமைச்சர் கூறினார்.
வரும் மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முனையங்கள் திறக்க திட்டம் உள்ளது.
தற்போதைக்கு பயணிகள் முனையம் ஒன்று, மூன்று அகியவை மூலம் பயணம் செய்வர்.


