சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் எல்லைக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தளர்த்தப்படும்.
என்றாலும்கூட, இரு நாடுகளுக்கும் இடையில் பேருந்து சேவையைத் துரிதப்படுத்த மேலும் கால அவகாசம் தேவை என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
இருநாடுகளுக்கும் இடையில் நிலப் போக்குவரத்தை வேகப்படுத்துவதற்கு முன்னதாக நிலவரங்களை மதிப்பிடவேண்டும்.
இதற்கு அதிகாரிகளுக்குக் கால அவகாசம் தேவை என்று அமைச்சர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட நிலப் போக்குவரத்து முறையின் பெரும் பகுதி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலம் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமலேயே இருந்து வந்துள்ளதை திரு ஈஸ்வரன் ஒரு பேட்டியில் சுட்டினார்.
"நிலப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த முயலும்போது சரளமான போக்குவரத்தை உறுதி செய்யவேண்டும். இதற்கு நீண்ட நெருங்காலம் பிடிக்காது.
"என்றாலும் போதிய அளவுக்கு கால அவகாசம் தேவைப்படும்," என்று திரு ஈஸ்வரன் விளக்கினார்.
கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள், கொவிட்-19 பரிசோதனை, தனிமை உத்தரவின்றி சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் போய் வரலாம்.
அவர்கள் 'விடிஎல்' என்படும் தனிப்பட்ட பயணப்பாதைத் திட்ட பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்.
பொதுப் பேருந்து சேவைகள் பற்றி கருத்துக் கூறிய அமைச்சர், பொதுப் போக்குவரத்து சேவை நடத்துவோர், சேவைகளை அம லாக்க ஆயத்தமாவதன் தொடர்பில் இப்போது நிலப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றுடன் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

