பிரைட் ஹில் ரயில் சந்திப்பு நிலையம்: $526மி. குத்தகை

பிரைட் ஹில் ரயில் சந்திப்பு நிலையம்: $526மி. குத்தகை

1 mins read
4720fb30-7fc4-4ccf-9a19-6b4515d69abe
-

பிரைட்­ ஹில் எம்­ஆர்டி சந்­திப்பு நிலை­யத்­தை­யும் குறுக்­குத் தீவு வழித்­த­டம் கட்­டம் 1ன் கீழ் அமைக்­கப்­படும் சுரங்­கப்­பா­தை­களை­யும் வடி­வ­மைத்து கட்­டு­வதற்­காக சுமார் $526 மில்­லி­யன் குத்­த­கையை நிலப் போக்­கு­வரத்து ஆணை­யம் வழங்கியது.

சிங்­கப்­பூ­ரில் பூமிக்­குக் கீழே கட்­டு­மா­னப் பணி­களை மேற்­கொள்­வ­தில் வல்­லமை பெற்­றுள்ள 'பென்டா ஓஷன் கன்ஸ்ட்­ரக்­‌ஷன்' என்ற நிறு­வ­னத்­திற்கு அந்­தக் குத்­தகை கொடுக்­கப்­பட்டு இருப்­ப­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

பணி­கள் இந்த ஆண்டு இரண்­டா­வது காலாண்­டில் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. 2030ல் பய­ணி­கள் சேவை தொடங்­கும். புதிய ரயில் நிலை­யம் சின் மிங் அவென்­யூ­வில் அமை­ய­விருக்­கும் புதிய ஒரு போக்­கு­வ­ரத்து முன்­னு­ரிமை பாதை­யு­டன் இணைக்­கப்­படும்.

இந்த 2 கி.மீ. பாதைப் பணி இந்த ஆண்டு இரண்­டா­வது பாதியில் தொடங்கி 2029ல் நிறை­வடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரைட்­ ஹில் சந்­திப்பு நிலை­யம் கட்டி முடிக்­கப்­ப­ட்டு சேவையில் ஈடுபடுத்தப்படும்போது பய­ணி­கள் குறுக்­குத் தீவு வழித்­த­டத்­திற்­கும் தாம்­சன் ஈஸ்ட் கோஸ்ட் வழித்­தடத்­திற்­கும் இடை­யில் மாறிச் செல்ல வச­தி­யாக இருக்­கும்.