'கொவிட்-19 கிருமியுடன் வாழும் சூழலில் பொறுப்புடன், விவேகத்துடன் செயல்படுக'

'கொவிட்-19 கிருமியுடன் வாழும் சூழலில் பொறுப்புடன், விவேகத்துடன் செயல்படுக'

2 mins read
9d963877-2899-465b-b037-2b5b2a747d90
-

சிங்­கப்­பூர் கொவிட்-19 கிரு­மி­யு­டன் வாழ வேண்­டிய காலம் வந்­து­விட்ட சூழ­லில், பொறுப்­பு­டன், விவே­கத்­து­டன் சிங்­கப்­பூ­ரர்­கள் நடந்­து­கொள்ள­வேண்­டி­யது மிக­வும் முக்­கி­ய­மா­னது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறினார்.

இப்­போ­தைய காலத்­தில் சட்­டங்­கள் என்­பவை சட்­டங்­கள் மட்­டுமே என்று அமைச்­சர் பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டார்.

திரு ஓங், ஒன் எஃப்­எம் 91.3 வானொலிக்­குப் பேட்டி அளித்­தார்.

"சட்­டத்­திற்கு உட்­பட்டு நீங்­கள் செயல்­பட வேண்­டும்.

"அதே­வே­ளை­யில், பொறுப்­பு­டன், புரிந்­து­ணர்­வு­டன் நீங்­கள் நடந்­து­கொள்ள வேண்­டும்.

"உட்­பு­றங்­களில் காற்­றோட்­டம் அவ்­வ­ளவு நன்­றாக இருக்­காது என்­ப­தால் அத்­த­கைய இடங்­களில் முகக்­கவசத்தை நீங்­கள் அணிந்து­கொள்ள வேண்டும்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

பொறுப்­பு­டன், விவே­கத்­துடன் நடந்­து­கொண்டதால்­தான் இப்­போதைய நிலையை அடைந்து இருக்­கி­றாம். இனி­யும் இது அவசி­யம் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

கடைத்­தொ­கு­தி­கள், மின்­தூக்கி­கள், போக்குவரத்து, உணவங்காடி நிலை­யங்­கள் போன்ற உட்­புற இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­ய­வேண்டும் என்­பது கட்­டா­ய­மானது.

இருந்­தா­லும் பேருந்து நிறுத்­தங்­கள், காலித்­த­ளங்­கள் போன்ற வெளிப்­புற இடங்­க­ளைப் பொறுத்­த­வரை மக்­கள் அதை விரும்­பி­னால் அணிந்து கொள்­ள­லாம்.

மின்­தூக்­கி­யில் தனி­யாக இருக்­கும்­போ­தும் முகக்­க­வ­சத்­து­டன் இருப்­ப­தில் தப்­பில்லை என்­றார் திரு ஓங்.

இந்த நடை­முறை சிறார் விளை­யாட்­டுத் திடல்­க­ளிலும் பொருந்­தும்.

திட­லில் கூட்­டம் அதி­கம் என்று பெற்றோர் நினைத்­தால் தங்­கள் பிள்­ளையை வேறு இடத்­திற்கு அவர்­கள் அழைத்­துச் செல்­ல­லாம்.

அல்­லது முகக்­க­வ­சத்­து­டன் பிள்ளை விளா­யா­ட­லாம் என்­றால் அவ்­வாறே செய்­ய­லாம் என்­றார் சுகா­தார அமைச்­சர் திரு ஓங்.

கிஸ்92 எஃப்­எம், ஒன் எஃப்­எம் 91.3 ஆகிய இரண்டு எஸ்­பி­எச் மீடியா வானொ­லி­க­ளுக்­கும் தனித்­தனி­யாக அமைச்சர் பேட்டி அளித்­தார்.

சிங்­கப்­பூர் எல்­லை­களை மறு­படி­யும் திறந்துவிடும் திட்­டம் பற்றிய கேள்­வி­க­ளுக்கு அமைச்­சர் பதில் அளித்­தார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­ாத­வர்­கள் மிகக்­க­வ­ன­மாக நடந்­து­கொண்டு தங்­க­ளைப் பாது­காத்­துக் கொள்­ள­வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

சிங்­கப்­பூ­ரில் கட்­டுப்­பா­டு­கள் விதி­கள் அனைத்­தை­யும் ஒரே நாளில் அகற்­றி­விட இய­லாது என்ற திரு ஓங், படிப்­ப­டி­யா­கவே அதைச் செய்­வதே நம் அணு­கு­முறை என்று கூறினார்.

கொவிட்-19 கிருமி அறவே ஒழி­யாது. சளிக்­காய்ச்­சல் போன்ற நோய்­க­ளு­டன் வாழ்­வ­தைப்­போல் இனி நாம் கொவிட்-19 கிரு­மி­யோடும் வாழ­வேண்­டும். ஆகையால் இது எப்­படி என்­பதை நாம் கற்­போம் என்று அவர் தெரி­வித்­தார்.