ஆசியாவில் கடற்கொள்ளை, ஆயுதபாணி கொள்ளைகளை ஒடுக்குவதற்கான அனைத்துலக ஒத்துழைப்பில் தனது கடப்பாட்டை சிங்கப்பூர் மறுஉறுதிப்படுத்தி இருக்கிறது.
இதற்கு வகை செய்யும் ஓர் உடன்பாடு கையெழுத்தாகி இருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
இதனையடுத்து மேலும் ஐந்தாண்டிற்குச் சிங்கப்பூர் கடற்கொள்ளை, ஆயுதபாணி கொள்ளைகளைத் துடைத்தொழிக்க அனைத்துலக அளவில் சேர்ந்து செயல்படும்.
உடன்பாடு 2022 ஏப்ரல் 1 முதல் 2027 மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.
உடன்பாட்டில் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனும் ஆசியாவில் கடற்கொள்ளை, ஆயுதபாணி கொள்ளைக்கு எதிரான வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டு அமைப்பின் தகவல் பகிர்வு நிலையத்தின் நிர்வாக இயக்குநரான மசாஃபுமி குரோக்கியும் கையெழுத்திட்டனர்.

