உணவு விநியோக ஊழியர்களில் சுமார் 60% கொரோனா காலத்தில் தற்காலிகமாக வேறு வேலைகளைப் பார்த்தனர்.
மூன்று பெரிய உணவு விநியோக இணையத்தளங்கள் நடத்திய ஓர் ஆய்வு மூலம் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது.
இருந்தாலும் ஆய்வில் கலந்து கொண்ட 4,200 பேரில் மூன்றில் கிட்டத்தட்ட இரண்டு பேர் தாங்கள் பகுதிநேர அடிப்படையில் அவ்வாறு செய்ததாகக் கூறினர்.
வாரம் ஒன்றுக்குச் சராசரியாக 20 மணி நேரத்துக்கும் குறைவாக அப்படி வேலை பார்த்ததாக 54 விழுக்காட்டினர் கூறினர் என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கிராப், டெலிவரூ, ஃபுட்பாண்டா ஆகிய மூன்று நிறுவனங்கள் அந்த ஆய்வை மார்ச் 4ஆம் தேதிக்கும் மார்ச் 17ஆம் தேதிக்கும் இடையில் நடத்தின. 29% ஊழியர்கள் தங்கள் வருவாய்க்கு உணவு விநியோக வேலையையே முழுமையாகச் சார்ந்து இருந்ததாக ஆய்வில் தெரிவித்தனர்.

