'பாலின பாரபட்சத்தைக் கையாள கூடுதல் முயற்சி எடுக்கலாம்'

'பாலின பாரபட்சத்தைக் கையாள கூடுதல் முயற்சி எடுக்கலாம்'

1 mins read
65588c6f-b113-48e9-b159-ada6ea704357
-

வழக்­க­றி­ஞ­ரா­கத் தாம் பணி­யாற்­றத் தொடங்­கியபோது, நீதி­மன்ற வழக்கு­க­ளைக் கையாள்­வது ஆண்­க­ளுக்­குத்­தான் பொருத்­த­மாக இருக்­கும் என்­றும் பெண்­கள் வர்த்­தக, சொத்­து­ரிமை சட்­டம் தொடர்­பி­லான பணிகளில் ஈடு­ப­டு­வதே நல்­லது என்­றும் தம்­மி­டம் கூறப்­பட்­ட­தாக பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் குமாரி இந்­தி­ராணி ராஜா தெரி­வித்­துள்­ளார். எனி­னும், தாம் வழக்­கு­களை கையா­ளும் முன்­னணி வழக்­க­றி­ஞ­ராக உரு­வெடுத்­ததோடு 2003ஆம் ஆண்டு மூத்த வழக்­க­றி­ஞ­ராக நிய­மிக்­கப்­பட்­டதை அவர் குறிப்­பிட்­டார்.

"தவ­றான எண்­ணத்­து­டன் அத்­த­கைய கருத்­து­களை யாரும் தெரி­விக்­க­வில்லை, இருந்­தா­லும் வர்த்­தக, சொத்­து­ரிமை விவ­காரங்­களுக்­குத்­தான் பெண்­கள் பொருத்­த­மாக இருப்­பர் என்ற அதி­கம் வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத ஊகம் பொது­வா­கவே இருந்­தது," என்று நிதி, தேசிய வளர்ச்சி ஆகி­ய­வற்­றுக்­கான இரண்­டாம் அமைச்­ச­ரு­மான குமாரி ராஜா கூறி­னார்.

வேலை­யி­டங்­கள், வீடு­கள் ஆகிய இரு வகை­யான சூழல்­களிலும் இத்­த­கைய மறைந்­தி­ருக்­கும் ஊகங்­க­ளைக் கையாள கூடு­தல் முயற்­சியை எடுக்­க­வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

நன்யாங் வர்த்தகப் பள்ளியின் அனைத்துலக மகளிர் தினத்திற்கான கலந்துரையாடலில் குமாரி ராஜா பேசினார். கடந்த திங்கட்கிழமையன்று பெண்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வெள்ளை அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.