ஆய்வு: பிற்காலத்தில் நம்பிக்கை இழக்கும் பெண்கள்

ஆய்வு: பிற்காலத்தில் நம்பிக்கை இழக்கும் பெண்கள்

1 mins read
7a68c66e-0cc0-49d0-ac33-1e39e6543bd7
-

பள்­ளியில் அறி­வி­யல், கணி­தம் ஆகிய பாடங்களில் ஆண்­க­ளைப்­போ­லவே பெண்­களும் சிறப்­புத் தேர்ச்சி பெறு­கின்­ற­னர். எனி­னும், பிற்­கா­லத்­தில் பெண்­க­ளுக்­குத் தங்­க­ளின் திறன்­கள் மீது இருக்­கும் நம்­பிக்கை குறை­வ­தாக நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் நடத்­திய ஆய்வில் தெரிய வந்­துள்­ளது.

'ஸ்டெம்' எனும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகி­யவை சார்ந்த துறை­களில் பெண்­கள் வேலை செய்­வதற்­கான வாய்ப்­பு­கள் மிகவும் குறை­வாக இருப்­ப­தை­யும் இந்த ஆய்வு தெரி­வித்­துள்­ளது. இத்தகைய வேலை­களில் ஈடு­பட பல பெண்­கள் ஆர்­வம் காட்டி வரும்­போ­தும் இந்­நிலை உரு­வா­கி­யுள்ளது.

738 சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கொண்டு ஆய்வு நடத்­தப்­பட்­டது. இதில் பங்­கேற்­றோ­ரில் 'ஸ்டெம்' பாடங்­களில் பட்­டம் அல்­லது பட்­ட­யம் பெற்ற 55 விழுக்­காட்­டுப் பெண்­கள் மட்­டுமே இந்தத் துறை­களில் வேலை செய்பவர்கள். ஆண்­க­ளுக்கு இந்த விகி­தம் 70 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

பெண்­கள் பொது­வாக அறி­வி­யல் துறை­களில் பணி­யாற்­று­வதற்­குப் பொருத்­த­மா­ன­வர்­கள் அல்­லர் என்ற சமூக அள­வில் இருக்­கக்­கூ­டிய ஊக­மும் இதற்­குக் கார­ணம் என்று இந்த ஆய்வில் தெரியவந்­தது.

'குளோ­சிங் தி ஜெண்­டர் கேப் இன் சிங்­கப்­பூர்' எனும் அறிக்­கை­யில் இந்த ஆய்­வின் முடி­வு­கள் இம்­மா­தத் தொடக்­கத்­தில் வெளியிடப்­பட்­டன.