சிங்கப்பூரில் அறிமுகமாகவுள்ள தானியக்க டாக்சிகள்

சிங்கப்பூரில் அறிமுகமாகவுள்ள தானியக்க டாக்சிகள்

1 mins read
95e348ee-e447-4e19-b5ab-99af35effff8
'மோபில்ஐ' நிறுவனத்துடன் இணைந்து 'கம்ஃபர்ட்டெல்குரோ' நிறுவனம் தானியக்க டாக்சிகளைத் தயாரிக்கிறது. படம்: 'கம்ஃபர்ட்டெல்குரோ' -

'கம்­ஃபர்ட்­டெல்­குரோ' நிறு­வ­னம், அடுத்த ஆண்டு முற்­பா­தி­யில் சிங்­கப்­பூ­ரில் இரண்டு தானி­யக்க டாக்சி­களை அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ளது. வருங்­கா­லத்­தில் தானி­யக்க வாக­னங்­கள் அதி­க­மா­கப் பயன்­படுத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதற்கான ஏற்­பா­டு­களை 'கம்­ஃபர்ட்­டெல்­குரோ' செய்து வரு­கிறது.

'ஆட்­டொ­னொ­மஸ் விஹிக்­கல்' எனும் தானி­யக்க வாக­னங்­களை உரு­வாக்க புதிய 30 மில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள நிலை­யத்தை 'கம்­ஃபர்ட்­டெல்­குரோ' அமைத்­துள்ளது. 'மோபில்ஐ' எனும் நிறு­வனத்­து­டன் இணைந்து தானி­யக்க வாக­னத் துறை­யில் முன்­னணி வகிக்­கும் இலக்கை 'கம்­ஃபர்ட்­டெல்­குரோ' கொண்­டுள்­ளது.

தானி­யக்க வாக­னங்­க­ளுக்­க­ான தொழில்­நுட்ப முறை­களை உரு­வாக்­கும் பணி­யில் 'மோபில்ஐ' ஈடு­பட்டுள்­ளது. தானி­யக்க டாக்­சி­களை சாலை­களில் செலுத்­த­மு­டி­யும் காலம் வந்­தால் அனைத்து தானி­யக்க வாக­னங்­க­ளை­யும் நிர்­வ­கிப்­பதற்­கான தொழில்­நுட்­பத் தளத்தை உரு­வாக்­க­வும் இவ்­விரு நிறு­வ­னங்­களும் எண்­ணம் கொண்­டுள்­ளன.

தானி­யக்க வாக­னங்­க­ளுக்­கான தொழில்­நுட்ப முறை­கள் தற்­போது ஆரம்­பக் கட்­டத்­தில்­தான் இருக்­கின்­றன. எனி­னும், அடுத்த 10லிருந்து 50 ஆண்­டு­க­ளுக்­குள் தானி­யக்க வாக­னங்­களை முழு­வீச்­சில் இயக்க முடி­யும் சூழல் உரு­வெ­டுக்­க­லாம் என்­பது இந்­தத் துறை­யின் கவ­னிப்­பா­ளர்­க­ளின் கருத்து.

ஓட்­டு­நர்­க­ளில்லா நகரை உரு­வாக்க நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் ஏற்­கெ­னவே முயற்­சி­களை எடுக்­கத் தொடங்­கி­விட்­டது.

கடந்த ஐந்­தாண்­டு­களில் 50க்கும் அதி­க­மான பேருந்­து­கள், சாலையைக் கூட்டும் லாரிகள் உள்ளிட்ட தானியக்க வாகனங்கள் சிங்கப்பூரில் சோதனையிடப்பட்டு வருகின்றன.