நிறுவனங்கள் தங்களின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக்கொள்ளவும் பருவநிலை தொடர்பான இலக்குகளை அடையவும் செயல்திட்டங்களை உருவாக்க முடிவெடுத்திருக்கலாம்.
சிங்கப்பூரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பருவநிலை, நீடித்த நிலைத்தன்மை மையத்தின் நிபுணத்துவத்தை நிறுவனங்கள் பயன்படுத்தலாம்.
நீடித்த நிலைத்தன்மை வர்த்தகங்களில் முதலீடு செய்வது மற்றும் அவற்றை விரிவுபடுத்துவது தொடர்பில் மையத்துடன் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது ஒரு வழி என்று திட்டத்தை நேற்று தொடங்கிவைத்த 'பாஸ்டன் கன்சல்டிங் குரூப்' (பிசிஜி) குறிப்பிட்டது.
அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு வெவ்வேறு துறைகள் சார்ந்த நிபணர்களை மையம் நியமிக்கும் என்று பிசிஜியின் பருவநிலை, நீடித்த நிலைத்தன்மைக்கான தென்கிழக்காசியப் பிரிவுத் தலைவர் திரு தேவ் சிவபிரசாத் தெரிவித்தார்.
பிசிஜி எனப்படும் அனைத்துலக ஆலோசனை நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளையும் வட்டாரங்களையும் சேர்ந்த 22,000 ஊழியர்கள் உள்ளனர். நீடித்த நிலைத்தன்மை பிரிவு தொடர்பில் நிறுவனத்திற்கு பழுத்த அனுபவம் உள்ளதாகக் கூறப்பட்டது.

