கிரெடிட் சூசுக்கு $678 மி. சோதனை

கிரெடிட் சூசுக்கு $678 மி. சோதனை

1 mins read
c98ffa2c-7eae-4172-99e6-017844a3e264
-

ஜியோர்ஜியாவின் முன்னாள் பிரதமர் பிட்ஸினா இவானிஷ்விலிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் இழப்பீட்டுத் தொகையாக கிரெடிட் சூஸ் வங்கி 500 மில்லியன் அமெரிக்க டாலரை (S$678 மி.) வழங்க வேண்டும் என்று பெர்முடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் வங்கி ஆலோசகர் பாஸ்கல் லெகோட்ரன் நீண்டகாலமாக செய்துவந்த மோசடியின் காரணத்தால் இந்நிலை. சிங்கப்பூரின் 'கிரெடிட் சூஸ் டிரஸ்ட்' மீதும் திரு இவானிஷ்விலி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு மூலம் அவர் மேலும் $300 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாகக் கோரவுள்ளார்.