சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் நேற்று புதன்கிழமை (மார்ச் 30) அதிகாரிகள் நடத்திய போக்குவரத்து சோதனையில் 15 வாகன ஓட்டுநர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.
கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அளவுக்கு அதிக சத்தம், கரும்புகை வெளியேற்றம் ஆகிய செயல்களையொட்டி அதிகாரிகள் அந்த வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர்.
சிங்கப்பூர் சாலைகளில் உயிர்பலி விபத்துகள் 25 விழுக்காடு அதிகரித்து இருக்கின்றன.
இந்தச் சூழலில் தேசிய சுற்றுப்புற வாரியம், காவல்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் அந்தச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தவறிழைத்த வாகன ஓட்டுநர்களுக்கு அதே இடத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.


