வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 950,000 குடும்பங்களுக்கு இம்மாதம் பொருள், சேவை வரி யு-சேவ்
தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருள், சேவை வரி மற்றும் மின்சாரம், தண்ணீர் கட்டணங்
களைச் சமாளிக்க குறைந்த, நடுத்தர வருமான சிங்கப்பூரர்களுக்கு உதவ இந்தத் தள்ளுபடி வழங்கப்
படுகிறது.
இதற்காக இந்த நிதி ஆண்டில் $720 மில்லியன் ஒதுக்கப்படுவதாக நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.
தகுதிபெறும் ஒவ்வொரு குடும்பமும் இந்த நிதி ஆண்டில், வீவக வீட்டின் வகையைப் பொறுத்து $440லிருந்து $760 தள்ளபடியைப் பெறும். தள்ளுபடி நான்கு கட்டங்களாக வழங்கப்படும். இவ்வாண்டில் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதத்திலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் தள்ளுபடி வழங்கப்படும்.
பொருள், சேவை வரி பற்றுச்சீட்டுகளை அரசாங்கம் 2012ஆம் ஆண்டிலிருந்து ரொக்கம், மெடிசேவ், யு-சேவ் என மூன்று வகையில் வழங்கி வருகிறது.
இந்த நிதி ஆண்டிலிருந்து
இந்தப் பட்டியலில் சேவை, பராமரிப்புக் கட்டணமும் சேர்த்துக்கொள்ளப்படும்.
இந்த நிதி ஆண்டில் குடும்பங்கள் இருமடங்கு அதிகமாக யு-சேவ் தள்ளுபடிகளைப் பெறும்.
மின்சார, தண்ணீர் கட்டணங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடியாக அவை வழங்கப்படும்.
ஓரறை அல்லது ஈரறை வீட்டில் வசிப்போர் பெறும் தள்ளுபடி எட்டிலிருந்து பத்து மாதங்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய
மின்சார, தண்ணீர் கட்டணத்துக்கு ஈடாக இருக்கும்.
மூன்றிலிருந்து நான்கு மாத மின்சார, தண்ணீர் கட்டணத்துக்கு ஈடாக மூவறை, நான்கறை வீட்டில் வசிப்போருக்கு தள்ளபடி வழங்கப்படும்.
இந்த வழங்கீடுகள் குறித்து இவ்வாண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது.
இந்த வழங்கீடுகள் மேம்படுத்தப்பட்ட நிரந்தர பொருள், சேவை வரி பற்றுச்சீட்டுத் திட்டம் மற்றும் குடும்ப ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் பொருள், சேவை வரி ஒரு விழுக்காடு உயர்த்தப்படும் (7 விழுக்காட்டிலிருந்து ஒன்பது விழுக்காடு) என்று தெரிவிக்கப்பட்டது.
ஓரறை, ஈரறை வீட்டில் தங்குவோருக்கு இம்மாதம் இரண்டு யு-சேவ் வழங்கீடுகள் கொடுக்கப்படும். ஒவ்வொரு முறையும் $95 பெறுமானமுள்ள யு-சேவ் வழங்கீடு இதில் அடங்கும்.
மூவறை வீட்டில் தங்குவோருக்கும் இருமுறை வழங்கீடுகள் வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு $85 பெறுமானமுள்ள யு-சேவ் வழங்கீடு கிடைக்கும்.
நான்கறை வீட்டில் தங்குவோருக்கு இருமுறை $75 பெறுமானமுள்ள யு-சேவ் வழங்கீடு கிடைக்கும்.
ஐந்தறை வீட்டில் தங்குவோருக்கு இருமுறை $65 வழங்கீடுகள் கிடைக்கும். எக்சிகியூட்டிவ்
அல்லது பலதலைமுறை வீட்டில் வசிப்போருக்கு இருமுறை $55 வழங்கீடுகள் வழங்கப்படும்.

