ஜயண்ட் பேரங்காடிகளில் தள்ளுபடி விலையில் விற்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் மேலும் 149 பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சராசரி விலையைவிட அவற்றை 20 விழுக்காடு குறைவான விலையில் ஜயண்ட் பேரங்காடிகள் விற்கின்றன.
இந்த 149 பொருள்களுடன் சேர்த்து 800க்கும் அதிகமான உணவுப் பொருள்கள், தனிநபர் பராமரிப்புப் பொருள்கள், வீட்டிற்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை ஜயண்ட் பேரங்
காடிகளிலிருந்து தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம், பணவீக்கம் ஆகியவற்றை சிங்கப்பூரர்கள் சமாளிக்க உதவும் வகையில் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஜயண்ட் பேரங்காடி இலக்கு கொண்டுள்ளது. தள்ளுபடி விலையில் அத்தியாவசியப் பொருள்களை விற்பதும் இதில் அடங்கும்.
இதற்காகவே 'லோவர் பிரைசஸ் தெட் லாஸ்ட்' எனும் இயக்கத்தை 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கியதாக ஜயண்ட் பேரங்காடிகளை நடத்தும் டிஎஃப்ஐ சில்லறை வர்த்தகக் குழுமம் கூறியது.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கை
யாளர்களுக்கு உதவ அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இயக்கம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அக்குழுமம் தெரிவித்தது.
இந்த இயக்கத்தின்கீழ் 22 விழுக்காடு வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள அன்றாட அத்தியா
வசியப் பொருள்களை வாடிக்கையாளர்கள் வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று கோல்ட் ஸ்டோரேஜ் பேரங்காடிகளையும் நடத்தும் டிஎஃப்ஐ குழுமம் கூறியது.
குறிப்பிட்ட நாள்களில் மட்டுமின்றி தள்ளுபடி விலை நாள்
தோறும் நடப்பில் இருக்கும் என்று அது தெரிவித்தது.
பணவீக்கம், விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு ஆகியவ ற்றையும் மீறி பட்டியலில் இடம்பெறும் அத்தியாவசியப் பொருள்களின் தள்ளுபடி விலை சீராக இருப்பதாக டிஎஃப்ஐ குழுமம் கூறியது.

