போத்தல்கள், கேன்கள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்து பற்றுச்சீட்டுகளைப் பெறும் வாய்ப்பு குடியிருப்பாளர்களுக்குக் கூடிய விரைவில் கிடைக்க இருக்கிறது.
இந்தத் திட்டத்தை நடை
முறைப்படுத்த ரிவர்ஸ் தானியங்கி இயந்திரத்தை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்துவது குறித்து நார்வேயைச் சேர்ந்த டொம்ரா நிறு
வனம் பரிசீலித்து வருகிறது.
1972ஆம் ஆண்டில் உலகின் முதல் ரிவர்ஸ் தானியங்கி இயந்திரத்தை டொம்ரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
தற்போது ரிவர்ஸ் தானியங்கி இயந்திரங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாக அது திகழ்கிறது.
சிங்கப்பூரில் போத்தல்கள், கேன்கள் ஆகியவற்றின் மறு
சுழற்சி விகிதத்தை உயர்த்த, 2019ஆம் ஆண்டிலிருந்து தேசிய சுற்றுப்புற வாரியமும் எஃப்அண்ட்என் ஃபுட்ஸ் நிறுவனமும் அவற்றுக்குச் சொந்தமான 50 ரிவர்ஸ் தானியங்கி இயந்திரங்களை அறிமுகப்படுத்தின.
மறுசுழற்சி செய்ய போத்தல்கள், கேன்கள் ஆகியவற்றை அந்த இயந்திரங்களில் போடு
பவர்களுக்கு அந்த இயந்திரங்கள் ஆக்டிவ்எஸ்ஜி வழங்கீடுகள் போன்ற சலுகைகளைத் தருகிறது.
இந்நிலையில், டொம்ரா நிறு
வனத்தின் ரிவர்ஸ் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் சிங்கப்பூரின் மறுசுழற்சித் திட்டம் மேம்படும் என்று நம்பப்படுகிறது.
டொம்ரா நிறுவனத்தின் புதிய வளம் உருமாற்று நிலையம் நேற்று அங் மோ கியோவில் திறக்கப்பட்டது.
இயந்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை தெரிந்துகொள்ள நிலையத்துக்குச் சென்று அங்குள்ள மூன்று ரிவர்ஸ் தானியங்கி இயந்திரங்களுக்குள் போத்தல்களைப் போடலாம்.
புளோக் 4010 டெக்பிளேஸ் 1ல் இந்த நிலையம் அமைந்துள்ளது. அனுமதி இலவசம். ஆனால் அங்கு செல்ல விரும்புவோர் 9792 2633 எனும் எண்ணுடன் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் புதிய நிவையத்தை நேற்று திறந்துவைத்தார். திறப்பு விழாவில் சிங்கப்பூருக்கான நார்வேயின் தூதர் ஐவிண்ட் எஸ். ஹோமும் கலந்துகொண்டார்.

