மருத்துவமனைகளில் நோயாளிகளை நேரில் சென்று பார்க்கலாம்
இம்மாதம் 4ஆம் தேதியிலிருந்து மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரில் சென்று பார்க்கலாம்.
சமூக அளவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியது.
அதுமட்டுமல்லாது, மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் நிலைமை மேம்பட்டிருப்பதும் ஒரு காரணம்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே நோயாளிகளை நேரில் சென்று காண அனுமதிக்கப்படுவர். மருத்துவ அடிப்படையில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி இல்லாதவர்கள் இதற்கு விதிவிலக்கு. இவர்கள் நோயாளிகளைப் பார்க்கச் செல்வதற்கு முன்பு சுயமாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் அதற்கான ஆதாரத்தைக் காட்டத் தேவையில்லை.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஏஆர்டி பரிசோதனை செய்துகொண்டு கிருமித்தொற்று இல்லை என்று நிரூபிக்க வேண்டும். இந்தப் பரிசோதனையை அவர்கள் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பரிசோதனை நிலையங்களில் நோயாளிகளைச் சென்று பார்ப்பதற்கு முன் 24 மணி நேரத்துக்குள் செய்துகொள்ள வேண்டும்.
'மருத்துவமனைக்கு வரும் முன் கருச்சிதைவு ஏற்பட்டிருக்கக்கூடும்'
குழந்தையைப் பெற்றெடுக்க தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்துக்கொண்டிருந்த நிறைமாத கர்ப்பணிக்கு மருத்துவமனைக்கு வரும் முன்பே கருச்சிதைவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அப்பெண்ணின் கணவர் நேற்று கூறினார்.
மருத்துவமனையுடன் நடந்த சில சந்திப்புகளுக்குப் பிறகு உண்மை நிலவரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமது மனைவி வீட்டில் இருக்கும்போதே அவருக்குக் கடுமையான ரத்தக் கசிவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

