'உக்ரேன் போர் காரணமாக ஆசியாவில் பாதக விளைவுகள்'

'உக்ரேன் போர் காரணமாக ஆசியாவில் பாதக விளைவுகள்'

2 mins read
8d23a361-6d2c-49e7-95ef-f2ce12049dff
-

உக்­ரேன் போர் ஆசி­யா­வில் பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தி உள்ளது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

அதோடு, சட்­டம், ஒழுங்கு, அமை­திக்­கான அனைத்­து­லக கட்டொழுங்கையும் அது சிதைத்து­ விட்­ட­தாக திரு லீ புதன்­கி­ழமை குறிப்­பிட்­டார்.

"உக்­ரேன் நெருக்­கடி கார­ண­மாக உலக பல­த­ரப்பு கட்டொழுங்கு முறை­யும் சேதப்­பட்­டு­விட்­டது.

"வாழ்­வா­தா­ரத்­திற்கு உல­க­மயத்­தைச் சார்ந்து இருக்­கின்ற சிங்­கப்­பூர் போன்ற சிறிய நாடு­க­ளைப் பொறுத்­த­வரை உக்­ரேன் நெருக்கடி கவலை தரும் நில­வ­ர­மாக இருக்­கிறது," என்று பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

வாஷிங்­ட­னில் செயல்­படும் 'வெளி­யு­றவு மன்­றம்' என்ற சிந்­தனைச் சிற்­பி­கள் அமைப்பு ஏற்­பாடு செய்த ஒரு மணி­நேர கலந்­து­ரை­யா­ட­லில் பேசிய பிர­த­மர், ரஷ்யா தன் பக்­கத்து நாடான உக்­ரேனை ஆக்­கி­ர­மித்­த­தால் சிங்­கப்­பூர் உள்­ளிட்ட ஆசி­யா­வுக்கு எப்­படி எல்­லாம் பாதிப்பு ஏற்­பட்டு இருக்­கிறது என்­பதை விளக்­கி­னார். அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடனை செவ்­வாய்க்­கி­ழமை பிர­த­மர் சந்­தித்­தார்.

பிறகு இரு­வரும் ரஷ்­யா­வின் செய­லால் ஏற்­பட்­டுள்ள கவ­லை­களை வெளிப்­படுத்­தி­னர்.

வாஷிங்­டன் டிசி­யில் மேலும் ஒரு நாள் பய­னுள்ள ஒரு நாளாக அமைந்­த­தாக பிர­த­மர் லீ சியன் லூங் ஃபேஸ்புக்கில் கூறினார்.

வெளி­யு­றவு மன்ற கலந்­து­ரை­யா­டலை முடித்­துக்­கொண்டு பிர­தமர், அமெ­ரிக்க தலை­ந­க­ரம் சென்று நாடா­ளு­மன்ற நாய­கர் நான்சி பெலோ­சியை சந்­தித்­தார்.

நாடா­ளு­மன்ற இதர உறுப்­பி­ர்­களைத் தான் சந்­தித்­த­தாகவும் பிர­த­மர் ஃபேஸ்புக்­கில் குறிப்­பிட்­டார். மத்­திய வங்­கி­யின் தலை­வர் ஜோர்மி போவெல், தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் ஜேக் சுல்­லி­வான் ஆகி­யோ­ரு­டன் நல்­ல­மு­றை­யில் பல­வற்­றை­யும் தான் விவா­தித்­த­தா­க­வும் திரு லீ தெரிவித்தார்.

அமெ­ரிக்க பய­ணத்­தின் அடுத்த கட்­ட­மாக திரு லீ நியூ­யார்க் செல்­கி­றார்.