75 பேரை ஏமாற்றிய மாதுக்குச் சிறை

75 பேரை ஏமாற்றிய மாதுக்குச் சிறை

1 mins read
349d109d-7f46-4f24-a601-095cab0a9030
-

நிதித்துறை பகுப்பாய்வாளர் ஒருவர் கிட்டத்தட்ட $600,000ஐ பெற்றுக்கொண்டு 75 பேரை ஏமாற்றிவிட்டார். அப்படிக் கிடைத்த பணத்தை அவர் தனது மார்பக அழகை மேம்படுத்திக் கொள்ளும் சிகிச்சைக்காகப் பயன்படுத்திக்கொண்டார்.

அலெக்சாண்டிரா லோ ஸிங் யிங், 27, என்ற அந்த மாது, தனக்கு தெரிந்தவர்களையே குறிவைத்தார்.

கடனாக பணம் வேண்டும் என்று பொய் காரணங்களை அவர் கூறினார். அந்த மாதிடம் இருந்து $128,151 மட்டுமே மீட்கப்பட்டது. லோ, $453,600 தொடர்பான 20 ஏமாற்றுக் குற்றங்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டார்.

அவருக்கு நான்காண்டு, நான்கு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதர 57 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இவை எஞ்சிய தொகையுடன் சம்பந்தப்பட்ட ஏமாற்று குற்றச் சாட்டுகள் என விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.