முதலாளியை 100 முறை கத்தியால் தாக்கிய பணிப்பெண் செய்த மேல்முறையீடு தோல்வி

சிங்­கப்­பூ­ரில் கடந்த 2016ஆம் ஆண்டு திரு­வாட்டி சியாவ் கிம் சூ, 59, என்ற தன்­ முத­லாளியை ஒரு பணிப்­பெண் ஒரு கத்­தி­யால் கிட்­டத்­தட்ட 100 முறை குத்­தி, வெட்­டி­விட்­டார். அதன் தொடர்­பில் டரி­யாதி, 29, என்ற அந்­தப் பணிப்­பெண் கொலைக் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

அதற்­காகப் பணிப்­பெண்­ணுக்கு சென்ற ஆண்டு ஆயுள்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கொலை செய்த குற்­ற­வாளி என்று அளிக்­கப்­பட்ட தீர்ப்பை எதிர்த்து டரி­யாதி மேல்­மு­றை­யீடு செய்­தார். அதை விசா­ரித்த மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று அவரின் மனுவைத் தள்­ளு­படி செய்து­விட்­டது.

தன் கட்­சிக்­கா­ரர், கொலைக் குற்­றச்­சாட்­டின் பேரில் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டுள்ளது.

ஆனால் இதற்­குப் பதி­லாக நோக்­க­மில்லா மரணம் விளைவித்த குற்­றச்­சாட்­டின் பேரில் அவர் குற்­ற­வாளி என்று தீர்ப்பு அளிக்­கப்­பட்டு இருக்க வேண்­டும் என பணிப்­பெண்­ணின் சார்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர் வாதா­டி­னார். ஆனால் இதை மூன்று பேரைக் கொண்ட மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் ஏற்­க­வில்லை.

தெலுக் குரோ­வில் இருக்­கும் திரு­வாட்டி சியா­வின் வீட்­டில் 2016 ஜூன் 7ஆம் தேதி அந்­தக் கொலை சம்­ப­வம் நிகழ்ந்­தது.

தன்­ கட­வுச்­சீட்டை (பாஸ்­போர்ட்) முத­லா­ளி­யி­டம் இருந்து திரும்­பப் பெற வேண்­டும். அவ­ரி­டம் இருந்து பணத்­தைத் திருட வேண்­டும். இந்­தோ­னீ­சி­யா­வுக்கு தப்பி ஓடி­விட வேண்­டும் என்று இந்­தோ­னீ­சியாவை சேர்ந்த டரி­யாதி திட்­டம் போட்டு இருந்­தார்.

ஆனால் அந்­தத் திட்­டத்தை முத­லாளி முறி­ய­டித்­து­விட்­டார்.

அதை­ய­டுத்து முத­லா­ளியைப் பணிப்­பெண் கொலை செய்­து­விட்டார். முத­லா­ளி­யின் உட­லில் குறைந்­த­பட்­சம் 94 கத்திக் காயங்­கள் காணப்­பட்­டன. அவற்­றில் பெரும்­பா­லா­னவை தலை­யி­லும் கழுத்­தி­லும் இருந்­தன.

குற்­ற­வாளி டரி­யாதி 2016 ஏப்ரல் 13ஆம் தேதி அந்­தக் குடும்­பத்­தில் பணிப்­பெண்­ணாக வேலை பார்க்கத் தொடங்­கி­னார். ஆனால் அவருக்குச் சொந்த வீட்­டின் நினைவு அள­வுக்கு அதி­க­மா­கி­விட்­டது.

திரு­வாட்டி சியா­வி­டம் இருந்து தன்­ பாஸ்­போர்ட்டை பெற்­று­விட வேண்­டும்; அவ­ரி­டம் இருந்து பணத்­தைப் பெற வேண்­டும்; தன் நாட்­டிற்­குத் தப்­பிச் சென்று ஒரு தொழி­லைத் தொடங்க வேண்­டும் என்று திட்டம் போட்ட டரி­யாதி, ஒரு கத்­தியை எடுத்து திரு­வாட்டி சியாவை மிரட்­டி­னார்.

கத்­தி­யைத் தீட்டி வைத்­துக்­கொண்ட அவர், சிறி­தாக இரண்­டா­வது கத்தி ஒன்­றை­யும் ஆயு­த­மாக வைத்­தி­ருந்­தார்.

பிறகு ஒரு பெரிய கத்­தியை சாமான்­கள் அறை­யில் இருந்து எடுத்­துக்­கொண்டு திரு­வாட்டி சியாவை அணு­கி­னார்.

சியாவ் சத்­தம் போட்டு போராடி­னார். அவரை கத்­தி­யால் பல முறை டரி­யாதி குத்­தி­னார், வெட்டி­னார்.

டரி­யாதி மீது மர­ணம் விளை­விக்­கும் நோக்­கத்­து­டன் கொலை செய்­த­தா­கக் கூறும் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. இதற்கு கட்­டாய மரண தண்­டனை உண்டு.

இருந்­தா­லும் பிறகு குற்­றச்­சாட்டை ஆயுள் தண்­டனை கிடைக்­கக்­கூ­டிய ஒன்­றாக அர­சி­னர் தரப்பு குறைத்­து­விட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!