மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை எடுத்த நடவடிக்கையில் $295,000 மதிப்புள்ள மொத்தம் 8,753 கிராம் கஞ்சா, 463 கிராம் ஹெராயின் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் 35 வயதுள்ள மலேசியர் ஒருவரை பீச் ரோட்டில் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஒரு வார காலத்தில் சுமார் 1,250 போதைப்புழங்கிகள் பயன்படுத்தும் அளவுக்குச் சமமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் ஏறக்குறைய 220 புழங்கிகள் ஒரு வார காலம் பயன்படுத்தும் அளவிலான ஹெராயின் பிடிபட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.