மாதுக்கு பொஃப்மா எச்சரிக்கை

மாதுக்கு பொஃப்மா எச்சரிக்கை

1 mins read
cd93c249-6583-4126-a33c-ce2cbfeaeb46
-

கேகே மகளிர், சிறார் மருத்­து­வ­மனை­யில் கொவிட்-19 கார­ண­மாக ஒரு குழந்தை இறந்­து­விட்­டது என்­றும் அதுபற்றி வேண்­டு­மென்றே அறி­விக்­கா­மல் இருந்து விட்டார்­கள் என்­றும் சிங்­கப்­பூ­ர­ரான ஒரு மாது சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெரி­வித்தார்.

அதுபற்றி புலன்­வி­சா­ரணை நடத்­தப்­பட்­டது. தனக்குக் கொஞ்சம் பழக்­க­மான ஒரு­வர் கூறி­ய­தைக் கேட்டு இட்­டுக்­கட்­டி­ அந்த 47 வயது மாது, அப்­படி ஒரு தகவலைத் தெரி­வித்­தார் என்­பது புலன்­வி­சா­ரணை மூலம் தெரி­ய­வந்­தது என்று இணை­ய­வழி பொய்ச் செய்­திக்­கும் சூழ்ச்சித் திறத்­திற்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்ட அலு­வ­ல­கம் (பொஃப்மா) அறிக்கை ஒன்­றில் நேற்று குறிப்­பிட்­டது.

அந்­தச் செய்தி பொய், அதனால் பொது நலன் பாதிக்­கும் வாய்ப்பு உண்டு என்­பது தெரிந்து அல்­லது அப்­படி நம்­பும் அள­வுக்­குக் கார­ணம் இருக்­கிறது என்­பது தெரிந்து அந்த மாது அப்­படிக் கூறி இருக்­கி­றார்.

இதற்­காக அவ­ருக்கு நிபந்­தனை­யு­டன் கூடிய 24 மாத எச்­சரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்று அந்த அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

நிபந்தனைக் காலத்­தில் அவர் மீண்­டும் குற்­றம் புரிந்­தால் அவர் முத­லில் செய்த செய­லுக்­காக அவர் மீது வழக்கு தொடுக்க முடி­யும்.