ஷெல் ஈஸ்ட்டர்ன் பெட்ரோலியம் நிறுவனத்தின் புலாவ் புகோம் ஆலையில் இருந்து எரிவாயு எண்ணெய்யைத் தவறாகக் கையாண்ட பெரும் சதியின் காரணகர்த்தாக்களில் ஒருவர் என்று கூறப்படும் ஜுவாண்டி புன்காட், 45, என்பவருக்கு 29 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வர்த்தக குற்றச் செயல்களுக்கு விதிக்கப்படும் மிக நீண்டகால சிறைத்தண்டனைகளில் இது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அவர், 2007லிருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. $128 மில்லியன் மதிப்புள்ள 203,403 டன் எண்ணெய்யைத் தவறாகக் கையாண்டதாக கடந்த பிப்ரவரியில் ஒப்புக்கொண்டார். நம்பிக்கை மோசடி தொடர்பான 20 குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.

