நைஜீரியா மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து வந்த சட்டவிரோத பணத்தைக் கையாண்ட ஒரு கும்பலில் சம்பந்தப்பட்டு இருந்த 38 வயது மாதுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அமிநோரிந்தா ஹேருமான் என்ற அந்த மாது, அந்தக் கும்பலில் சட்டவிரோதமாக பணத்தை அனுப்பும் ஒருவராக இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கும்பல் சிங்கப்பூரில் இருந்து $1.35 மில்லியனுக்கும் அதிக தொகையை வெளியே அனுப்ப அந்த மோசடிப் பேர்வழிகளுக்கு உதவியது.
தன் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பணத்தைப் பெற்றதாகக் கூறும் இரண்டு குற்றங்களை அந்த மாது நேற்று ஒப்புக்கொண்டார்.
இதே நோக்கத்திற்காக வேறு ஒரு மாதைத் தூண்டிவிட்டதாகக் கூறும் ஒரு குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார். இதர ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

