ஓரங்கட்டப்பட்ட 15 வாகனங்கள்

ஓரங்கட்டப்பட்ட 15 வாகனங்கள்

1 mins read
ba888fc7-119f-4bce-9135-90dfe1874bfe
-

சிங்­கப்­பூ­ரின் வடக்­குப் பகு­தி­யில் புதன்­கி­ழமை அதி­கா­ரி­கள் எடுத்த போக்­கு­வ­ரத்து சோத­னை­யில் 15 வாகன ஓட்­டு­நர்­கள் ஓரங்­கட்­டப்­பட்­ட­னர்.

கைப்பே­சி­ பேசிக்­கொண்டே வாக­னம் ஓட்­டி­யது, அள­வுக்கு அதிக சத்­தம், கரும்­புகை ஆகிய செயல்­க­ளை­யொட்டி அதி­கா­ரி­கள் அந்த வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­த­னர்.

சிங்­கப்­பூ­ர் சாலை­களில் உயிர்­பலி விபத்­து­கள் 25 விழுக்­காடு அதி­க­ரித்து இருக்­கின்­றன.

இந்­தச் சூழ­லில் தேசிய சுற்­றுப்­புற வாரி­யம், காவல் துறை, நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் ஆகிய அமைப்­பு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் அந்­தச் சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­னர்.

தவறிழைத்த வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு அதே இடத்­தில் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.