'நிக்கே ஆசியா' என்ற இணையத்தளத்தில் கேடிவி கொவிட்-19 குழுமம் பற்றிய ஒரு கருத்து சென்ற ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
அதை எழுதிய வோங் மிங் ஜுன், 28, என்பவர், ஆபாச படங்களைப் பகிர்ந்துகொண்ட உறுப்பினர்களுடன் கூடிய ஒரு டெலிகிராம் உரையாடல் குழுவில் இடம்பெற்று இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
திரைப்பட சட்டத்தின்கீழ் இரண்டு குற்றங்களையும் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்தையும் நேற்று வோங் ஒப்புக்கொண்டார். வோங்கிற்கு ஏப்ரல் 8 ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய இதர மூன்று பேருக்கு எதிராக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

