மலேசியர்களுக்கு மீண்டும் சுதந்திரம் அடைந்த உணர்வு

மலேசியர்களுக்கு மீண்டும் சுதந்திரம் அடைந்த உணர்வு

3 mins read
7d50c3d4-503e-4431-9f1e-b81be5fde0de
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மலேசியாவிற்குச் செல்ல ஜோகூர் கடற்பாலத்தில் திரளாகக் காத்திருந்த மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு (ஏப்­ரல் ஒன்றாம் தேதி) தனது எல்­லை­களை மலே­சியா திறந்­தது முதல் நேற்று மாலை நில­வ­ரப்­படி 33,000க்கும் அதி­க­மா­னோர் சிங்­கப்­பூர்-மலே­சிய எல்­லை­களைக் கடந்­துள்­ள­னர். எல்­லைப் பய­ணக் கட்டுப்­பாட்­டு­கள் தளர்வு குறித்த மகிழ்ச்­சி­யில் இரு நாட்டு அர­சாங்­கங்­க­ளுக்கு நன்றி தெரி­விப்­ப­தா­க­வும் இரு­வழியாகவும் தரை­வழிப் பய­ணம் மேற்­கொண்ட மலே­சி­யர்­கள் நேற்று தமிழ் முர­சி­டம் தெரி­வித்­த­னர்.

தாய்­நாட்­டுக்குத் திரும்ப முடிந்­த சுதந்­தி­ரம், மலே­சியா தனி நாடாக அடைந்­தி­ருந்த சுதந்­தி­ரத்­திற்கு ஒப்­பா­னது இது ஜோகூ­ரைச் சேர்ந்த 40 வயது சுப்­பை­யம்மா கரு­து­கி­றார். எல்லைத் திறப்­புக்கு முன்­ன­தாகத் தமது பிள்­ளை­க­ளைக் காண ஒரு­முறை மட்­டுமே மலே­சி­யா­வுக்­குத் திரும்­பி­ய­போது பல்­வேறு சோத­னை­க­ளைச் சந்­தித்­த­தா­கக் கூறி­னார் திரு­மதி சுப்­பை­யம்மா.

மலே­சி­யா­வுக்­குத் திரும்­பி­யோரில் பலர், முடக்­க­நிலை தொடங்­கிய பிறகு முதன்­மு­றை­யா­கத் தாய­கம் திரும்­பி­யுள்­ள­னர். எதிர்­பார்த்­ததை­விட பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் விரை­வில் தளர்த்­தப்­பட்­டது குறித்து மகிழ்ச்­சி­யு­டன் இருப்­ப­தா­கக் கூறிய ஜோகூ­ரைச் சேர்ந்த 32 வயது ரேக­வன் அரு­ணா­ச­லம் கிரு­மிப் பர­வ­லால் இங்கு வேலை பார்த்­துக்­கொண்­டி­ருந்த மலே­சி­யர்­கள் பட்ட வலி கொஞ்ச நஞ்­ச­மல்ல எனக் கரு­து­கி­றார்.

"பலர் வேலை இழந்தும் வீடு திரும்ப இய­லாத நிலை­யில் இருந்­த­தைக் கண்­டேன்," என்­றார் அவர். நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் திடீ­ரென அறி­விக்­கப்­பட்­ட­போது உணர்ந்த குழப்­பத்தை நினை­வு­கூர்ந்த ரேகவன், தாம் இப்­போது நிம்­ம­தி­யு­டன் தாய்­நாடு திரும்­பு­வதாகக் கூறி­னார்.

உற்­பத்­தித் துறை­யில் ஆய்­வுக்­கூ­டத்­தில் வேலை செய்­யும் 27 வயது விஜயா ஆறு­மு­கம், இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிற­கு­தான் தமது குடும்­பத்­தைக் காணப்­போ­வ­தா­கத் தெரி­வித்­தார். விரை­வில் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே எப்­போ­தும்­போல போக்கு­வ­ரத்து இயங்­க­வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

எந்­தத் திட்­ட­மும் இல்­லா­மல் நேற்று காலையே ஜோகூ­ருக்­குத் திரும்ப முடிவுசெய்த 28 வயது விஜ­ய­லட்­சுமி, தமது குடும்­பத்­தி­ன­ருக்கு இன்ப அதிர்ச்­சி­யைத் தரப்­போ­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.

கடந்­த ஆண்டு இங்கு வந்து உற்­பத்­தித் துறை­யில் இயந்­திரம் இயக்­கு­நபவரா­கப் பணி­பு­ரி­யும் குமார் விஜயா, முதன்­மு­த­லாகப் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் நடப்புக்கு வந்த பிறகு மலே­சியா திரும்­பு­வ­தில் மகிழ்ச்சி அடை­வ­தா­கக் கூறி­னார். துப்­பு­ரவுப் பணி மேல­தி­கா­ரி­யான 40 வயது விஷ்ணு, தமது அண்­ணனின் இறு­திச் சடங்­கிற்­குச் செல்­லப்­போ­வ­தா­கத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் உண­வுக்­கடை ஒன்­றில் நிர்­வா­கி­யா­கப் பணி­யாற்­றப்­போ­கும் 26 வயது புவித்ரா தேவி, தாம் சிங்­கப்­பூர் வரும் வேளையில் புதிய கட்­டுப்­பாட்­டுத் தளர்வு சரி­யான நேரத்தில் வந்­துள்­ள­தா­கக் கூறி­னார். தனிமை உத்­த­ரவு தற்­பொ­ழுது தேவை இல்­லா­த­தால் தாம் வேலை பார்க்­கப்­போ­கும் நிறு­வ­னம் தம்மை முன்­கூட்­டியே வரும்­படி கேட்­டுக்­கொண்­டுள்­ள­தா­க­வும் குமாரி புவித்ரா குறிப்­பிட்­டார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு ஏழே மணி­நே­ரத்­தில் ஜோகூர் கடற்பாலம், துவாஸ் பாலம் ஆகி­ய­வற்­றின் வாயி­லாக 11,000க்கும் அதி­க­மா­னோர் தரை­வழி மலே­சி­யா­விற்­குற் சென்­ற­னர். நேற்று முன்­தி­னம் இரவு 11 மணிக்­கெல்­லாம் பல்­வேறு சிங்­கப்­பூர்-மலே­சிய எல்­லைப் பகு­தி­களில் பலர் வரி­சை­யில் காத்­தி­ருக்­கத் தொடங்­கி­ய­தாக குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் தெரி­வித்­தது.

நிலை­மைக்கு ஏற்­ற­வாறு வாக­னங்­க­ளுக்­கான தடங்­க­ளை­யும் மோட்­டார் சைக்­கிள்­க­ளுக்­கான தடங்­க­ளை­யும் மாற்றி அமைக்­க­வேண்டி இருந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கூடு­தல் செய்தி: ஹர்­ஷிதா

பாலாஜி

கி. ஜனார்த்தனன்