உட்லண்ட்ஸ் கடைக்காரர்கள்: மலேசியர் தாயகம் சென்றதால் வியாபாரம் 30% வரை குறைவு

உட்லண்ட்ஸ் கடைக்காரர்கள்: மலேசியர் தாயகம் சென்றதால் வியாபாரம் 30% வரை குறைவு

1 mins read
c7da2b5b-0078-4b74-b97d-003fdd3d2642
-
Google News Preferred Icon

சிங்­கப்­பூர்-மலே­சியா தரை­வழி எல்­லை­கள் ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு முழு­மை­யா­கத் திறக்­கப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து இங்குள்ள மலே­சி­யர்­கள் குறிப்­பாக உட்­லண்ட்ஸ் பகு­தி­யைச் சேர்ந்த மலே­சி­யர்­கள் பலர் ஜோகூர் பாரு­விற்­குத் திரும்­பி­யுள்­ள­னர். ஜோகூர் சென்று பிர­பல கடை­களில் சாப்­பிட்டு மகிழ சிங்­கப்­பூ­ரர்­களும் ஆர்­வ­மாக இருக்­கி­றார்­கள்.

இத­னால், தங்­க­ளு­டைய வரு­வாய் 30 விழுக்­காடு வரை குறைந்­தி­ருப்­ப­தாக உட்­லண்ட்­சில் உள்ள சில உண­வங்­கா­டிக்­காரர்­களும் சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­களும் தெரி­வித்­த­னர்.

எனி­னும், எதிர்­வ­ரும் மாதங்­களில் மலே­சிய ஊழி­யர்­கள் அன்­றா­டம் சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­செல்­லும்­போது தங்­க­ளுக்கு வியா­பா­ரம் சூடு­பி­டிக்­கத் தொடங்­கும் என நம்­பு­வ­தாக உட்­லண்ட்ஸ் பகு­தி­யைச் சேர்ந்த 18 கடைக்­கா­ரர்­களில் பல­ரும் நம்­பிக்கை தெரி­வித்­த­னர் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே வெள்­ளிக்­கி­ழமை மாலை 5 மணி நில­வ­ரப்­படி ஏறத்­தாழ 33,700 பேர் பய­ணம் செய்­த­தாக குடி­நு­ழைவு, சோத­னைச்­சாவடி­கள் ஆணை­யம் முன்­ன­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தது. அவர்­களில் 80 விழுக்­காட்­டிற்கும் அதி­க­மா­னோர், அதா­வது 27,600 பேர், சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஜோகூ­ருக்­குப் புறப்­பட்­ட­னர்.

ஜோகூர் திரும்­பி­யோ­ரில் பெரும்­பா­லா­னோர் மலே­சி­யர்­கள் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. நேற்­றைய நில­வ­ரப்­படி, துவாஸ் இரண்­டாம் இணைப்­புப் பாலம், உட்­லண்ட்ஸ் கடற்­பா­லம் வழி­யாக மேலும் அதி­க­மானோர் எல்­லை­யைக் கடந்­தி­ருப்­பர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மார்­சி­லிங் மால், மார்­சி­லிங் லேன் ஃபுட் சென்­டர், உட்­லண்ட்ஸ் எம்­ஆர்டி நிலை­யம் ஆகி­ய­வற்­றில் கடை நடத்­தும் பலர், கொவிட்-19 தொற்­றி­யது முதல் சிங்­கப்­பூரில் இருந்து வந்த மலே­சி­யர்­களில் அதிக மானோர் இப்­போது தங்­கள் நாட்­டுக்குத் திரும்பி இருப்­ப­தாக தெரி­வித்­த­னர்.