வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான ஒன்பது கடைத் தொகுதிகளின் கட்டுமானப் பணிகள் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாகத் தடைப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள கடைத் தொகுதிகளில் உட்லண்ட்சில் உள்ள 888 பிளாசா, பாசிர் ரிஸ் வெஸ்ட் பிளாசா, அட்மிரல்ட்டி பிளேஸ், லிம்பாங் கடைத்தொகுதி ஆகியவை அடங்கும்.
சுவா சூ காங் அவென்யூ 3ல் உள்ள சன்ஷைன் பிளாசாவின் மேம்பாட்டுப் பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது.
ஆனால் பணிகள் நிறைவடைவதற்கு முன்பு அதன் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பொறுப்பு வகித்த பிரதான ஒப்பந்ததாரர் எச்சிஜே கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் நொடித்துப் போனதால் பணிகள் தடைப்பட்டுள்ளன.

