வினையாக முடிந்த விளையாட்டு

வினையாக முடிந்த விளையாட்டு

1 mins read
5132df48-8281-4ec4-9a39-f7092da55120
காலாங் ரிவர்சைட் பூங்காவில் நேற்று பின்தொடர்ந்த ஆடவரின் காலைக் கடித்தது நீர்நாய். படம்:ஷின்மின் -

காலாங் ரிவர்­சைட் பூங்­கா­வில் நேற்று காலை வழக்­கம்­போல ஓட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்த 52 வயது திரு ஆங், வீடு திரும்­பா­மல் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல நேரிட்­டது.

காலை நேர ஓட்­டத்­தின்­போது அவ்­வப்­போது அவர் ஐந்­தாறு நீர்­நாய்­க­ளைப் பார்த்­த­துண்டு. ஆனால் நேற்று 30 நீர்­நாய்­களை ஒரு­சே­ரக் கண்­ட­தும் உற்­சா­க­ம­டைந்த அவர், அவற்­றைக் காணொளி எடுப்­ப­தற்­கா­கப் பின்­தொ­டர்ந்­தார். இரண்டு மீட்­டர் தொலை­வில் இருக்­கி­றோம் என்று நினைத்­தி­ருந்­த­வ­ருக்கு திடீர் அதிர்ச்சி. முதிர்ந்த நீர்­நாய் ஒன்று சட்­டென்று அவ­ரைத் தாக்­கி­யது.

அசை­யா­மல் நின்­றால் அது தன்னை ஒன்­றும் செய்­யாது என்ற நினைப்­பி­லும் மண்­வி­ழுந்­தது. அவ­ரது காலைப் பதம்­பார்த்­தது நீர்­நாய்.

பின்­னர் அரு­கில் இருந்த கழிப்­பறை­யில் காலில் வழிந்த ரத்­தத்­தைக் கழு­விக்­கொண்டு ராஃபிள்ஸ் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார் ஆங். ஊடு­க­திர்ச் சோதனை நடத்­திய மருத்­து­வர் டெட்­ட­னஸ் தடுப்­பூ­சி­யும் போட்­ட­தா­கக் கூறி­னார் அவர். வழக்­க­மா­கக் குடும்­பத்­தி­ன­ரி­டம் காட்டு விலங்­கு­க­ளுக்கு அரு­கில் செல்­லக்­கூ­டாது என்று அறி­வுரை சொல்­லும் தானே உற்­சா­கத்­தில் செய்­வ­த­றி­யாது நீர்­நாய்­க­ளுக்கு அருகே சென்­றதை அவர் நினை­வு­கூர்ந்­தார்.

'ஏக்­கர்ஸ்' அமைப்­பின் இணைத் தலைமை நிர்­வாகி கலை­வா­ணன் பால­கி­ருஷ்­ணன், குட்­டி­க­ளு­டன் இருக்­கும் நீர்­நாய்­கள் மிக­வும் எச்­ச­ரிக்­கை­யோடு இருக்­கு­மென்­றார்.