காத்தோங் ஸ்குவேர் அருகே கைகலப்பு; காவல்துறை விசாரணை

காத்தோங் ஸ்குவேர் அருகே கைகலப்பு; காவல்துறை விசாரணை

1 mins read
48dae791-585b-4918-9cc2-972f4cec2881
ஆடவர்கள், மாதர்கள் சிலர் சாலையில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். படம்: காணொளிப் படம் -
multi-img1 of 2
Google News Preferred Icon

ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள காத்தோங் ஸ்குவேர் கடைத்தொகுதிக்கு அருகே நபர்கள் சிலருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதன் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஆடவர்கள் எண்மரும் மாதர்கள் இருவரும் சாலையில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதைக் காட்டும் காணொளி ஒன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 5) காலை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில், ஆடவர் ஒருவரின் கழுத்தை மற்றொருவர் நெரிப்பதை அந்தக் காணொளி காட்டியது. கைகலப்பைத் தடுக்க ஒரு சிலர் முயற்சி செய்வதையும் காண முடிந்தது.

கார் ஒன்றிலிருந்து கூர்மையான பொருள் ஒன்றை ஆடவர் ஒருவர் எடுப்பதும் காணொளியில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய காவல்துறை, அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.