குறுகியகால வருகையாளர்களுக்கு சலுகைகள்

குறுகியகால வருகையாளர்களுக்கு சலுகைகள்

2 mins read
b55d1461-9645-4a5a-b130-f87208777dba
2020 பிப்ரவரியில் மெர்லயன் பூங்காவில் நேரம் செலவிடும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள்.கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விடு­மு­றை­யைக் கழிக்க சிங்­கப்­பூ­ருக்கு வரும் குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­கள் விரை­வில் ஓர் இல­வ­ச சலு­கை­யைப் பெற்­றுக்­கொள்­ள­விருக்­கின்­ற­னர்.

சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் சலு­கைத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, இல­வச அனு­ப­வத்­திற்­கான சலு­கைப் பட்­டி­யல் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அதி­லி­ருந்து ஏதா­வது ஒன்றை சுற்­றுப் பய­ணி­கள் தெரி­வு­செய்­ய­லாம் என்­றும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

இத்­திட்­டம் எப்­போது நடை­முறைக்கு என்ற தக­வல் இன்­னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இன்று நடை­பெ­ற­வி­ருக்­கும் கழ­கத்­தின் சுற்­றுப்­ப­ய­ணத் துறைக் கருத்­த­ரங்­கில் மேல்விவ­ரங்­கள் வெளி­யி­டப்­படும் என்று தெரி­கிறது.

சென்ற மாதம் 17ஆம் தேதி இந்­தத் திட்­டத்­துக்­கான நிர்­வாக ஆத­ரவு தொடர்­பில் ஏலக்­குத்­தகை விடுக்­கப்­பட்­டது. நுழை­வுச் சீட்­டு­கள் வழங்­கு­தல், அவற்­றுக்­கான முன்­ப­திவை நிர்­வ­கித்­தல், சலு­கை­யாக வழங்­கப்­படும் அனு­ப­வங்­களை நிர்­வ­கித்­தல், வாடிக்­கை­யா­ளர் ஆத­ரவு போன்­ற­வற்­றுக்­கான ஏலக்­குத்­தகை அது.

சிங்­கப்­பூ­ரைத் தங்­கள் சுற்­றுப்­ப­ய­ணத்­துக்­குத் தெரி­வு­செய்த பய­ணி­களுக்கு நன்றி செலுத்­தும் வித­மாக இச்­ச­லு­கைக்கு ஏற்­பாடு செய்­யப்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர் சுற்­றுப்­ப­ய­ணக் கழ­கம் கூறி­யது. அதே­நே­ரத்­தில் சிங்­கப்­பூரை நன்­றா­கச் சுற்­றிப்­பார்க்க அவர்­களை ஊக்­கு­விப்­ப­தும் நோக்­கம்.

திட்­டத்­தின் அடுத்­த­டுத்த கட்­டங்­களில், பய­ணி­கள் இங்கு செல­வி­டு­வதை ஊக்­கு­விக்­கும் வகை­யில் மேலும் சில சலு­கைத் திட்­டங்­களும் அறி­விக்­கப்­ப­டக்­கூ­டும்.

சலு­கைத் திட்­டத்­துக்­குப் பயணி தகு­தி­பெ­று­கி­றாரா என்­ப­தைக் கழ­கம் உறு­தி­செய்­யும் என்­றும் இந்­தச் சலு­கைத் திட்­டம் குறித்த விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்­கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சலு­கைத் திட்­டம் பற்­றிய தக­வல்­களை பஹாசா இந்­தோ­னீ­சியா, சீனம், கொரிய மொழி, ஜெர்­மா­னிய மொழி, தாய், ஜப்­பா­னிய மொழி, வியட்­னா­மிய மொழி ஆகி­ய­வற்­றி­லும் மொழி­பெ­யர்க்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கொவிட்-19 நோய்ப் பர­வ­லுக்கு முன்­னர், சிங்­கப்­பூ­ருக்கு ஆக அதிக எண்­ணிக்­கை­யில் வரு­வோர் பட்­டி­ய­லில் சீனா­வும் இந்­தோ­னீ­சி­யா­வும் பல ஆண்­டு­க­ளாக முன்­ன­ணி­யில் இருந்­து­வந்­துள்­ளன.

கொவிட்-19க்குப் பிறகு சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வரு­கை­யும் அவர்­கள் இங்கு செல­வி­டும் தொகை­யும் வெகு­வா­கக் குறைந்­தது.

சென்ற ஆண்டு 330,000 வெளி­நாட்டு பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­னர். அவர்­கள் இங்கு ஏறக்­கு­றைய 1.9 பில்­லி­யன் வெள்­ளி­யைச் செல­விட்­ட­னர்.

ஆனால் 2019ஆம் ஆண்டு இங்கு வந்­தோர் எண்­ணிக்கை 19.1 மில்­லி­ய­னுக்­கும் அதி­கம். அவர்­கள் சிங்­கப்­பூ­ரில் 27.7 பில்­லி­யன் வெள்­ளி­யைச் செல­விட்­ட­னர்.

சிங்­கப்­பூர் அண்­மை­யில் அதன் எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யி­ருப்­ப­தால் இனி இங்கு வரும் வெளிநாட்டுச் சுற்­றுப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை மீண்­டும் உய­ரும் என்று நம்­பப்­ப­டு­கிறது.