புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்படும் இரண்டு நூலகங்கள்

மரின் பரேட் பொது நூல­க­மும் மத்­திய பொது நூல­க­மும் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­காக மூடப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

மரின் பரேட் பொது நூல­கம் மே மாதம் 9ஆம் தேதி­யில் இருந்து 2025ஆம் ஆண்­டு­வரை மூடப்­பட்­டி­ருக்­கும். தேசிய நூலக வாரி­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் இந்­தத் தக­வல் இடம்­பெற்­றுள்­ளது.

விக்­டோ­ரியா ஸ்ட்­ரீட்­டில் அமைந்­துள்ள மத்­திய பொது நூல­கம் ஜூன் 13ஆம் தேதி­யில் இருந்து அடுத்த ஆண்டு முற்­பா­தி­வரை மூடப்­பட்­டி­ருக்­கும்.

இவ்­விரு பொது நூல­கங்­களும் மூடப்­பட்­டி­ருக்­கும் காலத்­தில் பொது­மக்­கள் அரு­கில் உள்ள மற்ற நூல­கங்­க­ளுக்­குச் செல்­ல­லாம். மத்­திய பொது நூல­கத்­துக்கு வழக்­க­மா­கச் செல்­வோர் தோ பாயோ பொது நூல­கம், கேலாங் ஈஸ்ட் பொது நூல­கம், ஹார்­பர்­ஃபி­ரண்­டில் உள்ள நூல­கம் போன்­ற­வற்­றுக்­குச் செல்­ல­லாம் என்று வாரி­யம் ஆலோ­சனை கூறி­யது.

வாரி­யத்­தின் புதிய சேவை­யான 'கிரேப்-அன்-கோ' போன்­ற­வற்­றை­யும் பயன்­ப­டுத்த பொது­மக்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

இந்த புதிய முன்­னோ­டித் திட்­டத்­தின்­கீழ், நூல­கத்­தில் இருந்து இர­வல் பெறும் புத்­த­கத்­து­டன் சிறப்பு வாயில் வழியே செல்­லும்­போது தானி­யக்­க­மு­றை­யில் அது பதி­வா­கி­வி­டும். மே 18ஆம் தேதி தொடங்­கும் இத்­திட்­டத்­தின் மூலம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி­வரை நூல்­களை இர­வல் பெற­லாம்.

மத்­திய பொது நூல­கத்­தின் அடித்­த­ளம் ஒன்று புதுப்­பிக்­கப்­படும் வேளை­யில், ஐந்­தாம் தளத்­தில் 'கிரேப்-அன்-கோ' முறை­யில் நூல்­களை இர­வல் பெற­லாம். ஆங்­கி­லம், சீனம், மலாய், தமிழ் என நான்கு மொழி­க­ளி­லும் பெரி­ய­வர்­க­ளுக்­கான ஏறத்­தாழ 5,000 நூல்­களை இர­வல்­பெற முடி­யும்.

தேசிய நூலக வாரி­யக் கட்­ட­டத்­தில் முன்­ப­திவு செய்­யப்­பட்ட நூல்­களை இர­வல் பெற்­றுக்­கொள்­ள­வும் அவற்றை மீண்­டும் திருப்­பித்­த­ர­வும் ஏது­வாக 24 மணி நேர­மும் செயல்­ப­டக்­கூ­டிய சேவை முகப்பு அமைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

இந்­நி­லை­யில், மரின் பரேட் பொது நூல­கத்­துக்கு வழக்­க­மா­கச் செல்­வோர் கேலாங் ஈஸ்ட் பொது நூல­கம், பிடோக் பொது நூல­கம், தெம்­ப­னிஸ் வட்­டார நூல­கம் ஆகி­ய­வற்­றுக்­குச் செல்­ல­லாம் என்று வாரி­யம் ஆலோ­சனை கூறி­யுள்­ளது.

மே மாதத்­தில் இருந்து 24 மணி நேர­மும் செயல்­ப­டக்­கூ­டிய புத்­தக இர­வல் முகப்பு அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் என்று தேசிய நூலக வாரி­யம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!