தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அங் மோ கியோ சமூகத் தோட்டத்தில் மூத்தோருக்கான புதிய வசதிகள்

2 mins read
e18b760a-064c-488e-ac0c-ae4cf98a30dc
முதிய பெண்மணியுடன் உரையாடும் இயோ சூ காங் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இப் ஹோன் வெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அங் மோ கியோ அவென்யூ 6ன் புளோக் 123ல் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­குப் பிறகு திறக்­கப்­பட்­டி­ருக்­கும் சமூ­கத் தோட்­டம், மூத்த குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­க­ளைத் துடிப்­பு­டன் வைத்­துக்­கொள்ள உத­வும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட இட­ம­ளிக்­கிறது.

சக்­கர நாற்­கா­லி­களில் இருப்­போ­ருக்கு உகந்த வகை­யில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் தோட்­டம் எனும் இந்த முயற்சி ஆசி­யப் பெண்­கள் நலச் சங்­கத்­தால் தொடங்­கப்­பட்­டது. இதில் மூத்­தோர் தோட்­டக்­க­லை­யில் ஈடு­பட ஓர் இடம் ஒதுக்­கப்­படும்.

தோட்­டத்­தில் வள­ரும் மூலி­கை­க­ளின் நறு­ம­ணம் நினை­வாற்­றல் இழப்­பால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் நினை­வு­க­ளைக் கிள­றி­வி­டக்­கூ­டும் என்­றும் நம்­பப்­ப­டு­கிறது. செடி­க­ளு­டன் தொடர்­பு­கொள்­வ­தும் அவர்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்­கும்.

இயோ சூ காங் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இப் ஹோன் வெங் நேற்று காலை இந்­தத் தோட்­டத்­தைத் திறந்­து­வைத்­தார்.

சில முதி­யோ­ரு­டன் இணைந்து மிள­காய்ச் செடி­க­ளை­யும் அவர் நட்­டு­வைத்­தார்.

மூத்­தோ­ரும் உடற்­கு­றை­யுள்­ளோ­ரும் இந்­தத் தோட்­டத்­தில் சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் நடத்­தும் வாராந்­தர உடற்­ப­யிற்சி நட­வ­டிக்­கை­யி­லும் ஈடு­பட முடி­யும்.

தேசி­யப் பூங்­காக் கழ­கம் ஏற்­பாடு செய்­யும் தோட்­டக்­க­லைப் பயி­ல­ரங்­கு­க­ளி­லும் விழாக் காலக் கொண்­டாட்­டங்­க­ளி­லும் அவர்­கள் பங்­கு­பெ­ற­லாம்.

ஆசி­யப் பெண்­கள் நலச் சங்­கத்­தின் மூத்­தோர் சமூ­கப் பிரிவு நிர்­வ­கிக்­கும் இந்­தத் தோட்­டத்­திற்கு கேபிட்­ட­லாண்ட் ஹோப் அற­நி­று­வ­னம் உள்­ளிட்ட சில அமைப்­பு­கள் நன்­கொடை மூலம் ஆத­ரவு வழங்­கு­கின்­றன.

சமூ­கத் தோட்­டம் போன்ற பொது இடங்­கள், மூத்­தோ­ருக்­கும் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கும் சமூ­கத்­து­டன் கலந்­து­ற­வா­டும் வாய்ப்பை வழங்­கு­கின்றன என்றும், அவர்­கள் தங்­க­ளைத் துடிப்­பு­டன் வைத்­துக்­கொள்­ள­வும், சிறப்­பான முறை­யில் முது­மை­ய­டை­ய­வும் கைகொ­டுப்­ப­தாகவும் ஆசி­யப் பெண்­கள் நலச் சங்­கம் குறிப்­பிட்­டது.