ஆயுதங்கள் ஏந்தி இரண்டு பேரைக் காயப்படுத்திய இருவர் கைதுசெய்யப்பட்டனர். 20 மற்றும் 21 வயதுடைய அந்த நபர்கள் சுமார் 4 மணியளவில் சிக்கினர்.
தீவிர விசாரணைகள் மற்றும் கண்காணிப்பு கருவிகள், காவல் துறை கேமிராக்கள் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்ட படங்கள் நபர்களைப் பிடிக்க முடிந்ததாக காவல் துறை கூறியது.
முன்னதாக இந்த இருவரும் காவல் துறையால் தேடப்பட்டுவருகின்றனர்.
புளோக் 174 பூன் லே டிரைவில் இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்தது.
சந்தேக நபர்களுக்கும் தாக்கப்பட்டவர்களுக்கும் பழக்கம் உண்டு என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயப்பட்ட 22, 23 வயதான ஆடவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்ப்டடனர்.
சமூகத் தளங்களில் பரவலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்ட சம்பவக் காணொளியில், நீண்ட கத்திகள் ஏந்திய இருவர் முன்னும் பின்னும் நடந்துகொண்டிருப்பது தெரிகிறது. தாக்கப்பட்ட ஒருவரின் முகத்திலிருந்து இரத்தம் கொட்டுவதும் காணொளியில் உள்ளது.
காவல் துறையால் தேடப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவது கடுமையான குற்றமாகும் என காவல் துறை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
கத்தி, வாள், சவரக்கத்தி போன்ற ஆயுதங்கள் கொண்டு பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளன.


