அங் மோ கியோவில் நான்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள் ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள.
புளோக் 562, 563, 564, 565 ஆகிய புளோக்குகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 600 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவர்.
இந்தப் புளோக்குகள் 1979ஆம் ஆண்டு கட்டப்பட்டன. பெரும்பாலும் மூவறை, நாலறை வீடுகள் இங்குள்ளன.
ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டம் 1995ஆம் ஆண்டு தொடங்கியது. பழைய புளோக்குகளை இடித்து, அப்பகுதியை மேம்படுத்துவது திட்டத்தின் குறிக்கோள்.
திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் அளிக்கப்படும். அதோடு வீட்டின் சந்தை மதிப்பு இழப்பீடாக வழங்கப்படும்.
நான்கு ஆண்டுகள் பிறகு ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.


