சிங்கப்பூரின் அடுத்த சவால்

சிங்கப்பூரின் அடுத்த சவால்

2 mins read
f33118d9-0b2e-4491-836b-cbc0dd75f71a
தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை சுகாதார அமைச்சர் ஓங் யி காங்(இடது) நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர், கொவிட்-19க்குப் பிந்திய சூழலுக்குப் பிறகு நீரி­ழிவு போன்ற நீண்­ட­கால முற்றிய நோய்­களை வெற்­றி­க­ர­மான முறை­யில் சமா­ளிக்கவேண்­டிய தேவை இருக்­கிறது.

இது சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கும் அடுத்த சவால் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்து இருக்­கி­றார். இந்நிலையில், 'நல­மிக்க எஸ்ஜி' இயக்கத்தில் ஒரு­மித்த கவனம் செலுத்தவேண்­டி­யது அவ­சி­யம் என்றும் அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் ஈசூன் சமூக மருத்­து­வ­மனை வளா­கத்­திற்­குள் அமைந்துள்ள தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­தின் ரத்த சுத்திக­ரிப்பு நிலை­யத்தை அதி­கா­ர­பூர்­வ­மாகத் திறந்துவைத்து உரை­யாற்­றிய திரு ஓங், நோய் பெரு­கும்­போது இடம்­பெறவேண்டிய மிக முக்­கிய தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அணுகு­முறை யைப் பற்றி விளக்­கி­னார்.

அப்படிப்பட்ட ஒரு நிலை­யில், மருத்­து­வ­ம­னையை மைய­மா­கக் கொண்ட பரா­ம­ரிப்பு முறை­யிலிருந்து விலகி நோயா­ளி­களை மைய­மாகக்கொண்ட வரு­முன் காக்­கும் முன்­மா­திரி முறைக்கு நாடு மாறிக்­கொள்­ளும் என்­றும் இதுவே முக்கிய உத்­தி­யாக இருக்­கும் என்­றும் திரு ஓங் கூறினார்.

இதற்கு வகை­செய்­யும் நல­மிக்க எஸ்ஜி இயக்கம் சென்ற மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் சுகாதார அமைச்­சின் வரவு­செ­லவுத் திட்ட விவா­தத்­தின்­போது அறி­விக்­கப்­பட்டது.

நோய்­களை முன்­ன­தா­கவே கண்­ட­றிந்து கூடு­மானவரை மருத்து­வ­ம­னையை நாடா­மல் மக்­களை ஆரோக்கியமானவர்களாகக் கட்­டிக்­காப்­ப­தில் தனி­யார் மருத்­து­வர்­கள், குடும்ப மருத்­து­வர்­கள், சமூ­கத்­தி­னர் ஆகி­யோரை அதி­க­ அளவில் பங்­காற்­றும்­படி செய்­வது இந்­த இயக்கத்தின் நோக்­கம். நீரி­ழிவு நோயால் சிறு­நீ­ர­கம் செய­ல்­ இழந்துவிடக்­கூ­டிய நோயா­ளி­கள் சிங்­கப்­பூ­ரில் அதி­கம்.

நீரி­ழிவு போன்ற பிரச்­சி­னை­களைப் பொறுத்­த­வரை தனிப்­பட்­ட­வர்­க­ளின் உணவுப் பழக்­க­வ­ழக்­கங்­களும் முன்­னு­ரி­மை­களும் முக்­கி­ய­மா­னவை. ஆகை­யால், குடும்­பங்­க­ளுக்கு நம்­பிக்­கை­மிக்க சுமார் 2,000 தனி­யார் மருத்­து­வர்­களைத் திரட்­டும் ஓர் இயக்­கம் இடம்­பெற்­றால் மனப்­போக்­கு­களை மாற்­று­வதில் நல்ல பல­ன் ஏற்படும் என்­பதை அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் 40 வய­தும் அதற்­கும் அதிக வய­துள்ள சிங்­கப்­பூர்­வா­சி­க­ளுக்கு சுகா­தார அமைச்சு அழைப்பு விடுக்­கும். தாங்­கள் விரும்­பும் தனி­யார் மருத்­து­வர் ஒரு­வரைப் பார்க்க வாய்ப்பளிக்கும் தேசிய செயல்­திட்டம் ஒன்­றில் அவர்­கள் கலந்து­கொள்­ளலாம்.

நோயா­ளி­க­ளுக்கு உத­வும் வகை­யில் ஆக்­க­க­ர­மான ஊக்­கு­விப்­பு­களைப் பற்றி அர­சாங்­கம் சிந்­திக்க வேண்டி இருக்­கும் என்றும் திரு ஓங் குறிப்­பிட்­டார். குறை­வான சுகா­தா­ரப் பரா­மரிப்பு காப்­பு­றுதிக் கட்டணம், உண­வைக் கண்­கா­ணிப்­ப­தற்­கான பற்­றுச்­சீட்­டு­கள் போன்ற சாத்­தி­ய­மான ஊக்­கு­விப்­ப­களைப் பற்றி அமைச்­சர் மேலோட்­ட­மா­கக் குறிப்­பிட்­டார்.

நல­மிக்க எஸ்ஜி இயக்­கத்­திற்­கான விரி­வான திட்­டம் இந்த ஆண்­டின் நான்­கா­வது காலாண்­டில் வெள்ளை அறிக்­கை­யில் அறி­விக்­கப்­படும். அதை நாடா­ளு­மன்றம் விரி­வாக விவா­திக்­கும்.

அமைச்சர் ஓங்: நீரிழிவு போன்ற முற்றிய நோய்களை வெற்றிகரமாக சமாளிக்கவேண்டும்