செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
405068ac-f319-419d-adbc-c6da9ab91756
-

வாகனங்களின் டயர்களை

மாற்றுவதற்கான விலை அதிகரிப்பு

தங்கள் வாகனங்களின் டயர்களை மாற்ற ஓட்டுநர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். அதற்கான செலவு ஐந்திலிருந்து 10 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக பொருள்கள், சேவைகளுக்கான கட்டணம் கூடியுள்ளது. அதற்கு ஏற்றவாறு சில்லறை வர்த்தக விலையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டயர்களை மாற்றுவதற்கான விலை இம்மாதத்திலிருந்து அதிகரிக்கும் என்று அவற்றை விநியோகிப்போரிடம் தெரிவிக்கப்படுள்ளது.

சில கடைகளில் இவ்வாண்டு இரண்டாவது முறையாக இந்தச் சேவைக்கான விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு மாணவர்கள்

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாத நிலவரப்படி சிங்கப்பூருக்கு வந்த அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 63,600க்குக் கூடியதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 59,000ஆக பதிவானது. எனினும், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவான 68,200உடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் பதிவான எண்ணிக்கை குறைவு.

மாணவர்களுக்கான அனுமதிச்சீட்டைப் பெற வெளிநாட்டவர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பங்களைக் கொண்டு இந்தப் புள்ளி விவரங்கள் வரையப்படுகின்றன. கல்வி அமைச்சின் பள்ளிகள், உயர்கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பயில எண்ணும் மாணவர்களின் புள்ளி விவரங்கள் அதில் அடங்கும்.