'கூட்டத்தால் வீட்டில் வேலை செய்ய விருப்பம்'

'கூட்டத்தால் வீட்டில் வேலை செய்ய விருப்பம்'

2 mins read
b80773a9-5d2a-435b-8e42-bb38c281e785
கிளமெண்டி பெருவிரைவு ரயில் நிலையத்தில் திரண்ட கூட்டம். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பெரு­வி­ரைவு ரயில்­களில் கூட்­டம் அதி­கம் இல்­லா­தி­ருந்­தா­லும் பயண நேரம் குறை­வாக இருந்­தா­லும் மக்­கள் மீண்­டும் தங்­கள் வேலை­யிடங்­க­ளுக்­குச் சென்று வேலை செய்­வ­தில் கூடு­தல் ஈடு­பாடு காட்­ட­லாம். நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் நடத்­திய ஆய்வு ஒன்று இதைத் தெரி­வித்­துள்­ளது.

'டிரா­வல் பிஹே­வி­யர் அண்ட் பீப்­பள்' எனும் 'பய­ணப் பழக்­கங்­களும் சமூ­க­மும்' என்ற அந்த ஆய்­வின் முடி­வு­கள் கடந்த ஜன­வரி மாதம் ஹாங்­காங்­கின் சஞ்­சிகை ஒன்­றில் வெளி­யி­டப்­பட்­டன.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் சிவில், சுற்­றுச்­சூ­ழல் பொறி­யி­யல் பள்­ளி­யின் துணைப் பேரா­சி­ரியர் வோங் யீக் டியூ­வும் பட்­டக்­கல்வி இறு­தி­யாண்டு மாண­வ­ரான முகம்­மது சோஃபியான் தாஹி­ரும் இைணந்து ஆய்வை நடத்­தி­னர். 2020ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 21ஆம் தேதிக்­கும் சென்ற ஆண்டு ஜன­வரி மாதம் 16ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் அவர்­கள் ரயில் பய­ணம் மேற்­கொள்­ளும் 574 பேரைக் கொண்டு ஆய்வை நடத்­தி­னர்.

வேலை­யி­டத்­திற்­குச் சென்று வேலை செய்­வது குறித்து முடி­வெ­டுக்க பங்­கேற்­பா­ளர்­கள் கருத்­தில்­கொள்­ளும் அம்­சங்­களில் ரயி­லில் சேரும் கூட்­டம் 12.8 விழுக்­காடு பங்கு வகிப்­பது ஆய்­வில் தெரி­ய­வந்­தது. அதற்கு அடுத்­த­படி­யாக பயண நேரம் 10.7 விழுக்­காடு பங்கு வகிக்­கிறது.

வேலை­யி­டத்­திற்­குச் செல்­வது குறித்து முடி­வெ­டுக்­கும்­போது இவற்­றைத் தாண்டி பல்­வேறு அம்­சங்­களை மக்­கள் கருத்­தில்­கொள்­வர் என்­பதைப் பேரா­சி­ரி­யர் வோங் யீக் டியூ­வும் திரு முகம்­மது சோஃபியான் தாஹி­ரும் ஒப்­புக்­கொண்­ட­னர். எனி­னும் குறிப்பான இவ்­விரு அம்­சங்­களை ஆராய விரும்­பி­ய­தாக அவர்­கள் கூறி­னர்.

ஓரி­டத்­தில் பலர் ஒன்­று­கூடி வேலை செய்­யும் முறை மாறி­வ­ரு­கிறது. அந்த வகை­யில் ரயி­லில் கூடும் கூட்­டம், பயண நேரம் ஆகிய இரண்டு அம்­சங்­க­ளில்­தான் நாள­டை­வில் அதிக மாற்­றங்­கள் ஏற்­படும் என்று இவ்­வி­ரு­வ­ரும் குறிப்­பிட்­ட­னர்.

பய­ணப் பழக்­கங்­கள் தொடர்­பில் 2017ஆம் ஆண்டு இங்­கி­லாந்­தின் 'யூடபிள்யூஇ' பல்­க­லைக்­க­ழ­கம் ஓர் ஆய்வை நடத்­தி­யது. நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் நடத்­திய இந்த ஆய்­வும் அதைப் போன்­றது எனத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.