மீண்டும் சிங்கப்பூர் வரும் இந்தோனீசியர்கள்

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து பல இந்­தோ­னீ­சி­ய பய­ணி­கள் மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்கு வருகை தந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்­கு­வ­தற்கு முன்பு அடிக்­கடி சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொண்ட இந்­தோ­னீ­சி­யர்­கள் சிலர் கடந்த ஈராண்­டு­க­ளாக இங்கு வர­வில்லை. நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு அவர்­க­ளால் சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் தங்­க­ளின் உற­வி­னர்­க­ளை­யும் நண்­பர்­க­ளை­யும் நேரில் பார்க்­க­மு­டிகிறது.

சிலர் சுற்­றிப் பார்ப்­ப­தற்­கா­கவே சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்­கின்­ற­னர். தடுப்­பூசி போட்டுக்­கொண்ட பய­ணி­கள் இனி தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டிய அவ­சி­யம் இல்­லா­தது போன்ற விதி­முறை தளர்­வு­க­ளால் தாங்­கள் பெரி­தும் பல­ன­டைந்­துள்­ள­தா­கப் பய­ணி­கள் ஸ்ட்­ரெய்­ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­த­னர்.

சென்ற ஆண்டுகூட சுமார் 33,000 இந்தோனீசியர்கள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியது. முன்னதாக நடப்பில் இருந்த 'விடிஎல்' எனும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைக்காக ஆக அதிக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஐந்து நாடுகளில் இந்தோனீசியாவும் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.

தளர்த்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகளின்படி இம்­மா­தம் முதல் தேதி­யி­லி­ருந்து 12 வய­துக்கு உட்­பட்ட சிறு­வர்­கள் மற்­றும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் தனி­மைப்படுத்­திக்­கொள்­ள­வேண்­டிய அவ­சி­ய­மின்றி சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!