மோட்டார்சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட வழக்கறிஞர்

மோட்டார்சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட வழக்கறிஞர்

1 mins read
2c8c9bec-5539-4f1e-86d2-3101c72d9d8d
கவனக்குறைவாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி மோட்டார்சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த குற்றத்தை வழக்கறிஞர் ஒப்புக்கொண்டார். -

வழக்கறிஞர் லாரன்ஸ் கோ எங் யாவ் கவனக்குறைவாக காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில், மோட்டார்சைக்கிளோட்டி வோங் இயூ வாய், 33, என்பவர் உயிரிழந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஆயர் ராஜா விரைவுச்சாலையில் முதல் தடத்தில் கோ காரை ஓட்டிக்கொண்டிருந்தார். போக்குவரத்து நெரிசல் காரணமாக அவருக்கு முன்னால் இருந்த கார்கள் நின்றன.

முன்னால் நின்ற காருடன் மோதுவதைத் தவிர்க்க, கோ தமது காரை இடதுபுறம் திருப்பியதில், விரைவுச்சாலையின் இரண்டாம் தடத்தில் சென்றுகொண்டிருந்த திரு வோங் மீது அது மோதியது.

மூன்றாம் தடத்திற்குத் தள்ளப்பட்ட திரு வோங் மீது லாரி ஒன்று ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கவனக்குறைவாக காரை ஓட்டி மோட்டார்சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த குற்றத்தை கோ நேற்று ஒப்புக்கொண்டார்.