வீட்டுச் சாவி கிடைப்பதில் தாமதம்; எரிச்சலடைந்த உரிமையாளர்கள்

சிங்­கப்­பூ­ரின் மூன்று இடங்­களில் தேவைக்­கேற்ப கட்டி விற்­கப்­படும் அடுக்­கு­மாடி வீடு­களை வாங்­கி­யிருப்­போர் மேலும் காத்­தி­ருக்­க­வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

திட்­டங்­கள் முழு­மை­ய­டை­வ­தற்கு சில மாதங்­களே எஞ்சி இருக்­கும் நிலை­யில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் தாம­தம் குறித்த தக­வலை வெளி­யிட்­டுள்­ளது.

தெம்­ப­னிஸ் கிரீன்­கோர்ட், கிள­மெண்டி நார்த்­ஆர்க், உட்லே ஹில்­சைட் ஆகிய திட்­டங்­களில் இந்த ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டில் வீடு­கள் கட்டி முடிக்­கப்­படும் என்று முன்­னர் தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 நோய்ப் பர­வ­லால் ஏற்­கெ­னவே தாம­த­மான இந்­தத் திட்­டங்­கள் முடி­வ­டைய இப்­போது மேலும் மூன்று முதல் ஆறு மாதங்­கள் பிடிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

கடைசி நேரத்­தில் இத்­த­கைய அறி­விப்பு வந்­தி­ருப்­பது எரிச்­ச­லூட்­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசிய 25க்கும் அதி­க­மான உரி­மை­யா­ளர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

வீட்­டுக்­குப் பதிவு செய்­த­போது எதிர்­பார்க்­கப்­பட்ட தேதி­யில் இருந்து ஒன்­பது முதல் பன்­னி­ரண்டு மாதங்­கள் கழித்தே வீட்­டுச் சாவி கையில் கிடைக்­கும் என்­பதை அவர்­கள் சுட்­டி­னர்.

இந்­தத் தாம­தம் தங்­க­ளது திட்­டங்­களை மிக­வும் பாதிப்­ப­தா­கப் பல­ரும் கூறி­னர்.

எடுத்­துக்­காட்­டாக, இந்த ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டில் உட்லே ஹில்­சைட் அடுக்­கு­மாடி வீட்­டின் சாவி கிடைத்­தால் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­குப் பிறகு ஆண்டு இறு­தி­யில் புது வீட்­டில் குடி­யேற நினைத்­தி­ருந்­தார் திரு­வாட்டி ஜோயெல் லோ.

அடுத்த ஆண்டு புதிய வீட்­டுக்கு அரு­கில் இருக்­கும் தொடக்­கப் பள்­ளிக்­குத் தனது மகனை நடத்தி அழைத்­துச் செல்­வது இவ­ரின் திட்­டம். ஆனால் அடுத்த ஆண்டு மத்­தி­யில்­தான் புதிய வீட்­டில் குடி­யேற முடி­யும்.

15 மாதக் கைக்­கு­ழந்­தையை வைத்­தி­ருக்­கும் இவ­ருக்கு இந்­தக் கடைசி நேர அறி­விப்பு மிகுந்த சிர­மத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

தெம்­ப­னிஸ் கிரீன்­கோர்ட்­டில் 2,1192 வீடு­களும், கிள­மெண்டி நார்த்­ஆர்க்­கில் 1,179 வீடு­களும், உட்லே ஹில்­சை­டில் 1,355 வீடு­களும் இவ்­வாறு தாம­த­மாக ஒப்­ப­டைக்­கப்­பட இருக்­கின்­றன.

இது­கு­றித்து வீவக மார்ச் 31ஆம் தேதி மின்­னஞ்­சல் அனுப்­பி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசிய பெரும்­பா­லான வீட்டு உரி­மை­யா­ளர்­கள் கூறி­னர்.

மின்­னஞ்­ச­லில், கொவிட்-19 பர­வ­லைத் தடுப்­ப­தற்­காக 2020ல் இரண்டு மாதங்­கள் நடப்­பில் இருந்த திட்­டம், அதைத் தொடர்ந்து மலே­சியா ஈராண்­டாக அதன் எல்­லை­களை மூடி­யி­ருந்­தது ஆகி­ய­வற்­றால் கட்­டு­மா­னப் பொருள்­கள் விநி­யோ­கம் தடை­பட்­ட­தாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் குறிப்­பிட்­டி­ருந்­தது.

2021ல் தெற்­கா­சிய நாடு­களில் இருந்து வரும் கட்­டு­மான ஊழி­யர்­க­ளுக்­குச் சில மாதங்­க­ளாக கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­த­தை­யும் அது சுட்­டி­யி­ருந்­தது.

வீட்­டுத் திட்­டங்­கள் மேலும் தாம­தம் அடை­யா­மல் தவிர்ப்­ப­தற்கு ஆன அனைத்து முயற்­சி­க­ளை­யும் மேற்­கொள்­வ­தாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!