இணையப் பாதுகாப்புச் சேவை வழங்க உரிமம் கட்டாயம்

இணையப் பாதுகாப்புச் சேவை வழங்க உரிமம் கட்டாயம்

1 mins read
04d7e4a4-f1e6-4cd3-b65b-5a50ed59a72c
-

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லின்­போது இணை­யத் தாக்­கு­தல்­களும் அதி­க­ரித்த நிலை­யில், நம்­ப­க­மான இணை­யப் பாது­காப்­புச் சேவை குறித்த அக்­க­றை­களும் எழுந்­தன.

இதற்­குத் தீர்­வு­கா­ணும் வகை­யில், சிங்­கப்­பூ­ரின் இணை­யப் பாது­காப்பு அமைப்பு நேற்று புதிய உரிம நடை­மு­றை­யைத் தொடங்­கி­யுள்­ளது.

இதன்­கீழ், வர்த்­தக நிறு­வ­னங்­கள் இணைய ஊடு­ரு­வ­லுக்கு உள்­ளா­கும் சாத்­தி­யம் குறித்­தும் அவற்­றின் தக­வல் தொழில்­நுட்­பக் கட்­ட­மைப்­பு­களில் சந்­தே­கத்­துக்கு இட­ம­ளிக்­கும் நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­கின்­ற­னவா என்­ப­தை­யும் கண்­கா­ணிக்­கும் சேவையை வழங்­கு­வோர், அதற்­கான உரி­மத்­துக்கு விண்­ணப்­பிக்க வேண்­டி­யது கட்­டா­யம்.

வரும் அக்­டோ­பர் 11ஆம் தேதி அதற்­கான இறுதி நாள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வாடிக்­கை­யா­ளர் நல­னைப் பாது­காப்­ப­தும் நம்­ப­க­மான இணை­யப் பாது­காப்­புச் சேவை வழங்­கு­வோரை அடை­யா­ளம் காண உத­வு­வ­தும் நோக்­கம்.

உலக அள­வில் இத்­த­கைய உரி­மத்தை அறி­மு­கப்­ப­டுத்­தும் முன்­னிலை நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று எனக் கரு­தப்­ப­டு­கிறது.

ஈராண்­டுக்­கான உரி­மம் பெற விண்­ணப்­பக் கட்­ட­ணம் தனி­ம­னி­தர்­க­ளுக்கு 500 வெள்ளி; நிறு­வ­னங்­க­ளுக்கு ஆயி­ரம் வெள்ளி.

அக்­டோ­பர் 11ஆம் தேதிக்­குப் பிறகு உரி­மத்­துக்கு விண்­ணப்­பிக்­கா­மல் இணை­யப் பாது­காப்­புச் சேவை வழங்­கு­வது கண்­ட­றி­யப்­பட்­டால், 50,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­தமோ ஈராண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.

விண்­ணப்­பித்­தோ­ருக்கு உரி­மங்­கள் வழங்­கப்­பட்ட பிறகு, இணை­யப் பாது­காப்­புச் சேவைக் கட்­டுப்­பாட்டு அலு­வ­ல­கத்­தின் இணை­யத்­த­ளத்­தில் அத்­த­கை­யோ­ரின் பட்­டி­யல் வெளி­யி­டப்­படும்.