நுண்பாசிகளில் இருந்து சத்துணவு தயாரிப்பு

நுண்பாசிகளில் இருந்து சத்துணவு தயாரிப்பு

2 mins read
e3aa90aa-8a8f-4042-96e4-ad35bbdccfdf
-

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் 'எஸ்­இசி' எனும் ஆய்வு நிலை­யத்­தின் ஆய்­வா­ளர்­கள் நீடித்த நிலைத்­தன்மை கொண்ட மாற்று உணவை நுண்­பாசி அடிப்­ப­டை­யி­லான புர­தங்­களில் இருந்து தயா­ரிக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அது முப்­ப­ரி­மாண முறை­யில் அச்­சி­டப்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்­கக்­கூ­டும்.

டோஃபு தயா­ரிக்­கை­யில் கிடைக்­கும் துணைப் பொருள்­க­ளான சோயா மோர், சோயா விழுது ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்தி நுண்­பா­சி­களை வளர்ப்­பது குறித்து ஆரா­யப்­ப­டு­கிறது.

பின்­னர் அந்த நுண்­பா­சி­க­ளின் புர­தங்­களில் இருந்து உண­வுப் பொருள்­கள் தயா­ரிக்­கப்­படும். திட்­டத்­தின் தலை­வர் டாக்­டர் ஐரிஸ் ஹேபர்­கோர்ன் இந்­தத் தக­வல்­களைத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் டோஃபு தொழிற்­சா­லை­கள் ஒவ்­வொன்­றி­லும் அன்­றா­டம் 200 டன் வரை­யி­லான சோயா மோர் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறிய அவர், இத்­த­கைய பொருள்­கள் தற்­போது பய­னற்ற கழி­வு­க­ளாக வீணா­வ­தைக் குறிப்­பிட்­டார்.

இதே திட்­டத்­தில் பணி­யாற்­றும் பேரா­சி­ரி­யர் அலெக்­ஸாண்­டர் மேதிஸ், நுண்­பா­சி­களில் 70 விழுக்­காடு வரை புர­தங்­கள், வைட்­ட­மின்­கள், அமினோ அமி­லங்­கள் உள்­ளிட்­டவை இருப்­ப­தா­கக் கூறி­னார்.

சுவிட்­சர்­லாந்­தின் இடி­எச் ஸூரிக் பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கம், 'ஏஸ்­டார்' ஆய்வு நிறு­வ­னம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து சிங்­கப்­பூ­ரின் தேசிய ஆய்வு அற­நி­று­வ­னம் இந்த ஆய்வை மேற்­கொள்­கிறது.

ஆய்­வா­ளர்­கள் பாசிப் பருப்­பின் புரத விழு­தில் நுண்­பா­சி­களை வள­ர­விட்டு, முப்­ப­ரி­மாண அச்சு இயந்­தி­ரத்­தின் துணை­யு­டன் அதன் வடி­வம், நயம் ஆகி­ய­வற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

குறை­வான வேளாண் நிலங்­கள் உள்ள நக­ரங்­களில் உண­வுப் பாது­காப்பை உறு­தி­செய்ய, புத்­தாக்க உண­வுக் கட்­ட­மைப்­பு­கள் தேவை என்­றார் டாக்­டர் ஹேபர்­கோர்ன்.

2050ல் உலக மக்­கள்­தொ­கை­யில் 68 விழுக்­காட்­டி­னர் நக­ரங்­களில் வசிப்­பர் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டி­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.

ஆசி­யா­வில் பய­னா­ளர்­கள் இன்­னும் பாரம்­ப­ரிய முறை­யி­லான புர­தங்­களை உண்­ணவே விரும்­பு­வ­தால், இத்­த­கைய நீடித்த நிலைத்­தன்மை கொண்ட உண­வுப் பொருள்­க­ளின் நன்­மை­க­ளைப் பற்றி அவர்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­ல­வேண்­டும் என்று நுண்­பா­சி­யில் இருந்து சத்­து­ணவு தயா­ரிக்­கும் ஆய்­வுத் திட்­டக் குழு­வி­னர் கருத்­து­ரைத்­த­னர்.