குறைந்த பாதிப்புள்ள 'ஃபோர்மல்டிஹைட்' பயன்படுத்த திட்டம்

குறைந்த பாதிப்புள்ள 'ஃபோர்மல்டிஹைட்' பயன்படுத்த திட்டம்

1 mins read
6155696a-9911-4156-8654-fe0587feb54e
திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (நடுவில்).படம்: சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் -

ஃபோர்மல்­டி­ஹைட் எனப்­படும் ரசா­ய­னம் பொது­வாக கட்­டு­மா­னப் பொருள்­க­ளி­லும் வீட்­டிற்­கான மரக்­க­லன்­க­ளி­லும் பயன்­ப­டுத்­தப்

­ப­டு­கிறது.

ஆனால் இந்த ரசா­ய­னம் அதிக அள­வில் பயன்­ப­டுத்­தப்­ப­டும்­போது அது வெளி­யேற்­றும் துகள்­கள் உடல்­ந­லத்­தைப் பாதிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளன.

எனவே உட்­பு­றங்­களில் குறைந்த பாதிப்­புள்ள ஃபோர்மல்­டி­ஹைட் ரசா­னத்­தைப் பயன்­ப­டுத்த வர்த்­த­கங்­களும் அமைப்­பு­களும் முடிவு செய்துள்ளன.

நீடித்த நிலைத்­தன்மை உள்ள இடங்­க­ளுக்­கான செயல் கூட்­ட­ணி­யின் ஒரு பகு­தி­யாக இந்­தக் குறைந்த பாதிப்­புள்ள ஃபோர்மல்­டி­ஹைட் கடப்­பாட்­டுத் திட்­டம் உள்­ளது.

பொது­மக்­க­ளி­டையே விழிப்­

பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் நீடித்த நிலைத்­தன்­மைத் திட்­டங்­க­ளுக்கு ஏற்­பு­டைய பொருள்­களை விற்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு வாய்ப்­பு­களை அதி­க­ரிக்­க­வும் இந்­தத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­மூ­லம் ஆரோக்­கி­ய­மான வாழ்­வை­யும் வாழ்க்­கைத் தரத்­தை­யும் மேம்­ப­டுத்த திட்­டம் இலக்கு கொண்­டுள்­ளது.

2030 சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டத்தை இந்­தத் திட்­டம் ஆத­ரிக்­கிறது.

சாயம் உற்­பத்தி நிறு­வ­ன­மான 'கஷ்'ஷின் ஆலைக்கு நேற்று சென்­றி­ருந்த துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் இத்­திட்­டத்தை அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைத்­தார்.

குறைந்த பாதிப்­புள்ள ஃபோர்மல்­டி­ஹைட்­டைப் பயன்­ப­டுத்த பற்­று­றுதி எடுத்­துக்­கொண்ட 75 அமைப்­பு­களில் கஷ் நிறு­வ­ன­மும் ஒன்று.

சொத்து, மரக்­க­லன் உற்­பத்தி போன்ற துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களும் வர்த்­த­கச் சங்­கங்­கள், தொழிற்­சங்­கங்­கள், அர­சாங்க அமைப்­பு­கள் ஆகி­ய­வை­யும் அவற்­றில் அடங்­கும்.

சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம், சிங்கப்பூர் மரக்கலத் துறை மன்றம், சிங்கப்பூர் பசுமைக் கட்டட மன்றம் ஆகியவை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இக்கூட்டணியை அமைத்தன.