சக ஊழியரை மானபங்கம் செய்தவருக்குச் சிறை

சக ஊழியரை மானபங்கம் செய்தவருக்குச் சிறை

1 mins read
938f91f5-dc88-419c-a532-f16d6d83a3fb
-

தம்­மு­டன் வேலை பார்த்த 21 வயது பெண்­ணின் உடலை முறை­யற்ற வகை­யில் வர்­ணித்த பிறகு மான­பங்­கம் செய்த ஆட­வ­ருக்கு ஆறு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இந்­தக் குற்­றச் செயலை அந்த ஆட­வர் 2020ஆம் ஆண்­டில் புரிந்­தார்.

அர­சாங்­க அமைப்பு ஒன்­றில் பணி­பு­ரிந்த அந்த ஆட­வர் இன்­னோர் ஊழி­ய­ரின் முன்­னி­லை­யில் அந்­தப் பெண்ணை முறை­யற்ற வகை­யில் தொட்­டார்.

தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் அடை­யா­ளத்­தைக் காக்க ஆட­வ­ரின் பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இரு­வ­ரின் வேலை­யி­டம் பற்­றிய விவ­ரங்­கள் நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தி­லி­ருந்து டிசம்­பர் மாதம் வரை அப்­பெண்­ணி­டம் அந்த ஆட­வர் முறை­யற்ற குறுஞ்­செய்­தி­களை அனுப்­பி­ய­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் தியா­கேஷ் சுகு­மா­றன் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இதை அந்­தப் பெண் புறக்­க­ணித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, 2020ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 30ஆம் தேதி­யன்று இரு­வ­ரும் ஒன்­றாக வேலை செய்­து­கொண்­டி­ருந்­த­போது அப்­பெண்ணை அந்த ஆட­வர் தகாத முறை­யில் தொட்­டார்.

அந்­தப் பெண் அங்­கி­ருந்து வில­கிச் சென்­றும் அவ­ரைப் பின்­தொ­டர்ந்த அந்த ஆட­வர் மீண்­டும் அவ­ரைத் தொட்­டார்.

அத்­து­டன் நிறுத்­திக்­கொள்­ளா­மல் திரும்­ப­வும் அவரை முறை­யற்ற வகை­யில் தொட்­டார்.

இது­கு­றித்து தமது காத­ல­னி­டம் தெரி­வித்த அப்­பெண் போலி­சில் புகார் செய்­தார்.

பிறகு அப்பெண் பதவி விலகினார்.

அந்த ஆடவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று பதவி விலகியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.