கூடுதலான வர்த்தகங்கள் சமூகத்திற்குத் திருப்பித் தந்தன

கூடுதலான வர்த்தகங்கள் சமூகத்திற்குத் திருப்பித் தந்தன

1 mins read
a1b2d3ff-2fa2-48f3-b0df-cf5f0772bd59
-

சிங்­கப்­பூ­ரில் இயங்­கி­வ­ரும் தொழில் நிறு­வ­னங்­கள் கடந்த ஆண்டு சமூ­கத்­திற்­குத் திருப்பி அளித்­துள்­ளன. குறிப்­பாக, கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழ­லில் சிறப்­பாக செயல்­பட்ட நிதி, காப்­பு­றுதி, தக­வல் துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களுக்கு இது பொருந்­தும்.

தேசிய தொண்­டூ­ழிய, கொடை நிலை­யம் நடத்­திய ஆய்­வில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

2017ஆம் ஆண்டுடன் ஒப்­பு­நோக்க, சமு­தா­யத்­திற்கு நிறு­வ­னங்­கள் திருப்­பிக் கொடுக்­கும் போக்கு கடந்த ஆண்டு 15 விழுக்­காடு அதி­க­ரித்­தது. ரொக்க நன்­கொடை, இல­வச சட்ட ஆலோ­சனை வழங்­கும் சேவை, நல்ல செயல்­பா­டு­களை ஆத­ரித்­துப் பேசு­தல் உள்­ளிட்ட பல வழி­களில் சமு­தா­யத்­திற்கு நிறு­வ­னங்­கள் திருப்­பித் தந்­தன.

பொரு­ளி­ய­லுக்கு கொவிட்-19 சூழல் இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­னா­லும், சமு­தா­யத்­தில் தங்­க­ளு­டைய பங்கு குறித்து மறு­ம­திப்­பீடு செய்ய வர்த்­த­கங்­க­ளுக்கு அது வாய்ப்­ப­ளித்­த­தாக ஆய்வு கண்­ட­றிந்­தது.

கடந்த ஆண்டு மே முதல் செப்­டம்­பர் வரை நடத்­தப்­பட்ட அந்த ஆய்­வில் 1,014 வர்த்­த­கங்­கள் பங்­கெ­டுத்­தன. முக்­கால்­வாசி வர்த்­த­கங்­கள் கடந்த ஆண்டு குறைந்­தது ஒரு விதத்­தி­லா­வது சமூ­கத்­திற்­குத் திருப்­பித் தந்­தன.

ரொக்க நன்­கொடை, பொருள் நன்­கொடை, நிதி­யா­த­ரவு ஆகி­யவை நிறு­வ­னங்­கள் சமூ­கத்­திற்­குத் திருப்­பிக் கொடுக்­கும் பிர­ப­ல­மான வழி­மு­றை­க­ளாக உள்­ளன.

வேலைக்கு ஆள் எடுக்­கும்­போது அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் சிறந்த வர்த்­தக நடை­மு­றை­யும் நிறு­வ­னங்­க­ளி­டையே பிர­ப­ல­மாக இருந்­தது.